கைதி பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். தளபதியின் 64வது படமான இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உட்பட மிகப்பெரிய நட்சத்திர  பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. 

இதையும் படிங்க: "எனக்கு அசல் தான் வேணும்"... இளம் முன்னணி நடிகரை வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற நிகழ்ச்சியை சன் டி.வி. நேரலையில் ஒளிபரப்ப உள்ளது. உலகம் முழுவது பீதி கிளப்பி வரும் கொரோனாவால், மாஸ்டர் ஆடியோ லாஞ்சை பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க முடியாமல் போனது. அதனால் விஜய் ரசிகர்கள் இல்லாமல் இந்த ஆடியோ லாஞ்ச் நடக்கப்போவது தளபதியை சற்றே ஆப்செட் ஆக்கியிருப்பதாக தெரிகிறது. 

இதையும் படிங்க: உடம்பெல்லாம் கவர்ச்சி கொழுப்பு... உள்ளாடையுடன் போஸ் கொடுத்து அலர்ஜியாக்கும் ஆன்ட்டி நடிகை கிரண்..!

ஏப்ரம் 9ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதால் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு முன்னதாக ஒட்டு மொத்த டீமும் ஆடியோ ரிலீஸ் பங்கஷனுக்காக தீயாய் வேலை செய்து வருகிறதாம். மாஸ்டர் ஆடியோ லாஞ்சு டிக்கெட் மற்றும் டி-ஷர்ட்டின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதிலும் அந்த ஆரஞ்சு கலர் டி-ஷர்ட் ஏகப்பட்ட சந்தேகங்களை கிளப்பியுள்ளது. 

இதற்கு முன்னதாக நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் இரண்டு முறை சோதனை நடத்தினர். அப்போது நடிகர் விஜய் கோடி, கோடியாய் பணம் பெற்றுக்கொண்டு மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், அதனால் தான் ரெய்டு நடைபெற்றதாகவும் வதந்தி பரவியது. ஆனால் ஐ.டி. ரெய்டுக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ரஜினி இடத்திற்கு சிம்புவை தயார் செய்யும் கமல்... 100 கோடி சம்பளம் கேட்டதால் நட்பில் விழுந்த விரிசல்?

நடிகர் விஜய்க்கும் பாஜகவினருக்கும் இடையே எப்போதும் ஏதாவது பிரச்சனை வந்துவிடும். மெர்சல் படத்தின் போது கூட ஜி.எஸ்.டி-யை பற்றி பேசிய சர்ச்சை வசனங்கள் பிரச்சனையை கிளப்பியது. தற்போது நெய்வேலி மாஸ்டர் பட ஷூட்டிங்கின் போதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி அடுத்தடுத்து வந்த சோதனைகளால் தான் ரசிகர்கள் இல்லாமல் மாஸ்டர் ஆடியோ ரிலீஸை நடத்த விஜய் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சமாதான கொடியாக தான் ஆரஞ்சு நிறத்தில் டி-ஷர்ட் கொடுத்து, படக்குழுவினர் அனைவரையும் கட்டாயம் அணிந்துவர சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.