Asianet News TamilAsianet News Tamil

தளபதி விஜய்தான் தமிழகத்தின் நாளைய தீர்ப்பு... அரசியல் என்ட்ரிக்கு ஹிண்ட் கொடுத்த மன்சூர் அலிகான்

கனடாவில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு போன் செய்து பிளாஷ்பேக் காட்சி பற்றி கேட்டார்கள் என்று மன்சூர் அலிகான் தெரிவித்தார்.

Thalapathy Vijay is the verdict of Tamil Nadu tomorrow... Mansoor Ali Khan hinted at political entry sgb
Author
First Published Nov 1, 2023, 10:23 PM IST | Last Updated Nov 1, 2023, 10:33 PM IST

தமிழகத்தின் நாளைய தீர்ப்பு தளபதி விஜய்தான் என்றும் அதற்காக அவரும் அவரது ரசிகர்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் அரசியல் அட்வைஸ் கொடுத்திருக்கிறார். விஜய் நடித்த லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மன்சூர் அலிகான், "தளபதி விஜய் தான் தமிழகத்தின் நாளைய தீர்ப்பு. உங்களை நம்பித்தான் இந்த நாடு இருக்கிறது. அதற்காக விஜய் கடுமையாக உழைக்கணும்" என்று தெரிவித்தார். ரசிகர்களும் விஜய்க்கு ஒத்துழைப்பு கொடுக்கக் காத்திருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"ரசிகர்களே தமிழகத்தின் நாளைய தீர்ப்பை எழுத தயாராகுங்கள்" என்று அழைப்பு விடுத்த மன்சூர், புகைப்பிடிப்பது, மது அருந்ததை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

Trisha: லியோ படத்தில் என்னை கொல்லாமல் இருந்ததற்கு நன்றி! பட் விஜய் கூட அப்படி போடு.. நிறைவேறல திரிஷா பேச்சு!

தொடர்ந்து பேசிய மன்சூர் அலிகான், "படத்தில் த்ரிஷாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவர் பக்கத்தில்கூட செல்ல முடியவில்லை. மடோனா பாப்பா கிட்டயாவாது போகணும் என்று நினைத்தேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை." என்றும் வேடிக்கையாகப் பேசினார்.

Thalapathy Vijay is the verdict of Tamil Nadu tomorrow... Mansoor Ali Khan hinted at political entry sgb

லியோ படத்தில் வரும் முக்கியமான பிளாஷ்பேக் காட்சியை மன்சூர் அலிகான் விவரிப்பது போல வரும். அந்தக் காட்சிகள் சொதப்பலாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். அதற்கு பேட்டி ஒன்றில் பதில் கூறிய இயக்குநர் லோகேஷ், பிளாஷ்பேக் காட்சியில் மன்சூர் அலிகான் பொய்கூட சொல்லியிருக்கலாம் என்று கூறினார்.

மன்சூர் அலிகான் அந்த பிளாஷ்பேக் காட்சி பற்றியும் பேசினார். “தளபதி ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்பும் ஃப்ளாஷ்பேக் என்னவென்றால், கனடாவில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு எனக்கு போன் செய்து நீங்கள் எப்படி பிளாஷ்பேக் காட்சியில் பொய் சொல்லலாம் என்று கேட்டார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

தயாரித்த லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் வெளியான 12 நாட்களில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளது.

இந்தப் படத்தில் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரஜினி சொன்ன அந்த காக்கா விஜய்தான்.. லியோ விழாவில் உளறிய ரத்னகுமார்.. ட்ரெண்ட் செய்யும் ரஜினி ரசிகர்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios