MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Trisha: 'லியோ படத்தில் என்னை கொல்லாமல் இருந்ததற்கு நன்றி! திரிஷா பேச்சு!

Trisha: 'லியோ படத்தில் என்னை கொல்லாமல் இருந்ததற்கு நன்றி! திரிஷா பேச்சு!

'லியோ' சக்ஸஸ் மீட்டில், அழகு தேவதை வந்து நேரு ஸ்டேடியத்தையே அலங்கரித்த நடிகை த்ரிஷா, நீண்ட இடைவெளிக்கு பின்னர், விஜயுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Nov 02 2023, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Trisha

Trisha

'கில்லி' படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் தளபதி விஜய்க்கு ஜோடியாக, த்ரிஷா நடித்திருந்த லியோ திரைப்படம் கடந்த மாதம், அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 550 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள இந்த படத்தின் வெற்றிவிழா, தற்போது சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது.
 

24

லியோ வெற்றிவிழாவில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா பேசுகையில், "லியோ வெற்றிக்கு காரணமான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குனர் லோகேசுக்கு நன்றி. நிறைய இயக்குனர்களிடம் பணியாற்றி உள்ளேன், அப்படி நான் பணியாற்றியதால் சிறந்த இயக்குனர்களில் ஒருவர்  லோகேஷ். சத்யா போன்ற கதாபாத்திரத்தில் என்னை நடிக்கவைத்ததற்கு நன்றி.
 

34

குறிப்பாக படத்தில் என்னை கொல்லாமல் இருந்ததற்கு  நன்றி. மேலும் விஜயுடன் பணியாற்றியது, பள்ளி நண்பனை நீண்ட நாட்கள் கழித்து பார்த்ததை போல இருந்தது. அர்ஜூன், கவுதம் வாசுதேவன், உள்ளிட்டோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ரசிகர்கள் கடந்த 15 வருடங்களாக கேட்டு வந்தார்கள் எப்போது மீண்டும் விஜயுடன் நடிப்பீர்கள் என்று, இன்று அது நடந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

44

அன்று பார்த்த விஜய் இன்றும் அதே போல தான் உள்ளார். எந்த மாற்றமும் இல்லை. விஜய் என்றுமே ஸ்பெஷல், லோகேஷ் என்னிடம் கதை சொன்ன போது நான் நடிப்பதாகவே எனக்கு தோன்றவில்லை. இரண்டு வருடம் முன் எப்படி கதை சொன்னாரோ அதை அப்படியே எடுத்துக்கொடுத்தார். லியோ-வில் அப்படி போடு போன்ற பாடல் இருக்குமா என கேட்டதற்கு எனக்கும் அந்த ஆசை உள்ளது என கூறிய நிலையில் அது நிறைவேறாமல் போனது வருத்தம் என்பது போல் தெரிவித்துள்ளார்.

படம் பண்ணலாமான்னு விஜய் கேட்டதும் பயம் தான் வந்தது! பிரச்சனையே இது தான்.. தயாரிப்பாளர் லலித் கூறிய உண்மை!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved