ரஜினி சொன்ன அந்த காக்கா விஜய்தான்.. லியோ விழாவில் உளறிய ரத்னகுமார்.. ட்ரெண்ட் செய்யும் ரஜினி ரசிகர்கள்
விஜய் எப்போதும் நிற்க வைத்து யாருடனும் பேசமாட்டார். நாம் பேசப்போனாலே அமர வைத்து தான் பேசுவார். எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தானே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குனர் ரத்னகுமார்.
லியோ திரைப்படம் நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. லியோ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
உலகம் முழுவதும் லியோ திரைப்படம் கடந்த 12 நாட்களில் ரூ.540 கோடி வசூலை பெற்றதாக படக்குழு நேற்று (அக்டோபர் 31) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் தளபதி விஜய், த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மரியம் ஜார்ஜ், 'பிக் பாஸ்' ஜனனி, மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டியன் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இதில் பங்கேற்று பேசிய இயக்குனரும், லியோ படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார், “நான் சினிமாவுக்கு வர முக்கியமான காரணம் விஜய் தான். நான் சிறுவயதிலிருந்தே விஜய் ரசிகன். தொடக்கத்தில், விஜய்யின் புகைப்படத்தை யார் பார்ப்பார்கள் என்று பத்திரிகைகள் எழுதி வந்தது. ஆனால், தற்போது ஒரு புகைப்படத்தை காட்டியதும் திரையரங்கமே அதிருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு பாடலை அந்தச் சூழலுக்கு தகுந்தாற்போல எழுதியிருந்தோம். அதன் பின்னர் நாங்கள் படப்பிடிப்பு நடத்திகொண்டிருந்த நெய்வேலியில் உண்மையாகவே ரெய்டு வந்துவிட்டனர். லியோவில் நான் ரெடி தான் வரவா பாடலை கதைக்களத்துக்காக எழுதியிருந்தோம். ஆனால், இப்போது அந்தப் பாடலை என்னவாக மாறியிருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.
எப்போதும் நிற்க வைத்து யாருடனும் பேசமாட்டார். நாம் பேசப்போனாலே அமர வைத்து தான் பேசுவார். அவர் யாரையும் உயர்வானவராகவோ, தாழ்வானவராகவோ பார்க்க மாட்டார். எல்லோரையும் சமமானவராகவே பார்ப்பார். எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தானே ஆக வேண்டும்” என்று ரத்ன குமார் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இயக்குனர் ரத்னகுமாரின் இந்த பேச்சை கடுமையாக விமர்சித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். ரஜினி ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், ஏன்டா ரஜினி சொன்னா காக்கா விஜய்தானு உறுதிபடுத்தவடா இவ்ளோ கோடி செலவு பன்னி விழா நடத்திட்டு இருக்கீங்க” என்று கூறியுள்ளார்.
மற்றொரு ரஜினி ரசிகர் பதிவில், இவரை ATTACK பண்ண கூட இவரோட வார்த்தையை தான் பிச்சை எடுத்திருக்கானுங்க மானங்கெட்டவனுங்க. இந்த பொழப்புக்கு” என்று கடுமையாக திட்டி பதிவிட்டுள்ளார். மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில், ரத்னாவே விஜய் தான் அந்த காக்கான்னு கடைசியிலே ஒத்துக்கிட்டான்” என்றும் பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.
கீழே வந்து தான் ஆகணும்.. ரஜினி சொன்ன கழுகு கதையும், ரத்னகுமார் கிளப்பிய சர்ச்சையும்!!