லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கருப்பு நிற கோட், சூட்டில் செம்ம ஸ்டைலிஷாக வந்திருந்தார் தளபதி விஜய். 

சென்டர் ஆப் த அட்ராக்‌ஷன் என்ற சொல்லிற்கு பொருத்தமாக அனைவரது கண்களும் விஜய் மீது தான் பதிந்திருந்தது. விழா மேடையில் ஏறிய மறுகணமே விஜய் தேடியது நம்ம இடையழகி சிம்ரனை தான். காரணம் அந்த விழாவில் சிம்ரன் ஆடிய நடனத்திற்கு நன்றி தெரிவித்தார். 

அடுத்ததாக கடந்த முறை போன்று அரங்கிற்கு வெளியே ரசிகர்களுக்கு எவ்வித தொந்தரவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் அரைமனதுடன் இந்த விழாவை ரசிகர்கள் இல்லாமல் நடத்த ஒப்புக்கொண்டேன். அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். 

இந்த விழாவில் பேசுவதற்காக விஜய்யின் தாய், தந்தை மேடைக்கு அழைக்கப்பட்டனர். அப்போது விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகரிடம் உங்களது ஆசை என்ன என்று கேட்க விஜயைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று கூறினார். உடனே மேடைக்கு வந்து தளபதியும் அம்மா ஷோபாவையும், அப்பா சந்திரசேகரையும் ஆரத்தழுவி ஆசையை நிறைவேற்றி வைத்தார்.