Asianet News TamilAsianet News Tamil

நாங்க லியோ ட்ரைலர் பார்த்தே ஆகணும்.. கும்பலாக குவிந்த ரசிகர்கள் - ரோகினி திரையரங்கில் பரபரப்பு!

தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

Thalapathy Vijay Fans crowded in chennai rohini silver screens to see leo movie trailer ans
Author
First Published Oct 5, 2023, 6:13 PM IST

இந்நிலையில் தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் டிரைலரை திரையரங்கில் காண வேண்டும் என்று ஆசையோடு தற்பொழுது சென்னை ரோகினி திரையரங்கில் பெருந்திரளாக திரண்டு உள்ளனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் திரிஷா உள்ளிட்ட இந்திய திரை உலகின் பல முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் தான் லியோ.

வெளியிட்டிருக்கும் முன்பாகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை ட்ரெய்லர் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்த நிலையில் தற்போது அந்த சிக்கல்கள் எல்லாம் முடிந்து, சரியாக 6 மணி 30 நிமிடங்களுக்கு லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. 

பிரபல சன் நிறுவனத்தின் YouTube சேனலில் இந்த ட்ரைலர் வெளியாக உள்ளது, இந்த லியோ திரைப்படத்திற்கான இசை வெளியிட்டு விழா சென்னையில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்காமல் போனதும் குறிப்பிடத்தக்கது. 

என்ன சொல்றிங்க இதெல்லாம் இளையராஜா பாட்டு இல்லையா..? ரசிகர்களை பல ஆண்டுகளாக குழப்பி வந்த சில கோலிவுட் பாடல்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios