Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்துக்கு மட்டுமா..? 5 மாநிலங்களுக்கும் ஐந்தைந்தாய் அள்ளிக்கொடுத்த தளபதி விஜய்...!

அதுமட்டுமில்லை தமிழகத்தை சுற்றியுள்ள 5 அண்டை மாநில மக்களின் துயர் தீர்க்கவும் நிதியை வாரி வழங்கியிருக்கிறார் விஜய். 

Thalapathy Vijay Donate 10 Lakhs to Kerala 5 lakhs to Karnataka, Andhra, Telangana, pondy
Author
Chennai, First Published Apr 22, 2020, 2:32 PM IST

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Thalapathy Vijay Donate 10 Lakhs to Kerala 5 lakhs to Karnataka, Andhra, Telangana, pondy

மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பணிக்காக நிதி திரட்டி வருகின்றன. தொழிலதிபர்கள், தனியார் வங்கிகள், திரைப்பிரபலங்கள் உள்ளிடோர் கோடிகளை வாரி வழங்கி வருகின்றனர். அதேபோன்று கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து தவிக்கும் தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் படி ஃபெப்சி சார்பில் கோரிக்கை விடுத்திருந்தது. அதனை ஏற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நயன்தாரா உள்ளிட்டோர் லட்சங்களை வாரி வழங்கினர்.

Thalapathy Vijay Donate 10 Lakhs to Kerala 5 lakhs to Karnataka, Andhra, Telangana, pondy

கடந்த சில நாட்களுக்கு முன்பு தல அஜித்  ஒரே நாளில் கொரோனா நிவாரணத்திற்காக ரூ.1.25 கோடியை அறிவித்தார். அதன்படி பிரதமர் நிவாரண நிதிக்காகரூ.50 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.50 லட்சம், ஃபெப்சி அமைப்பிற்காக ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கினார். இருப்பினும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் எவ்வித நிவாரணமும் அறிவிக்காமல் இருந்தது விமர்சனங்களை எழுப்பியது. 

Thalapathy Vijay Donate 10 Lakhs to Kerala 5 lakhs to Karnataka, Andhra, Telangana, pondy

இதையும் படிங்க: ‘ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

இந்நிலையில் தல அஜித்தை போலவே ஒரே நாளில் ரூ.1.30 கோடியை நிவாரண நிதியாக அறிவித்துள்ளார். பிரதமர் நிவாரணத்திற்காக ரூ.50 லட்சம், முதலமைச்சர் நிவாரணத்திற்காக ரூ.50 லட்சம், ஃபெப்சி ஊழியர்களுக்காக ரூ.25 லட்சம் அறிவித்துள்ளார். 

Thalapathy Vijay Donate 10 Lakhs to Kerala 5 lakhs to Karnataka, Andhra, Telangana, pondy

இதையும் படிங்க: நயன்தாரா என்ன யோக்கியமா..? வாண்டடாக வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

அதுமட்டுமில்லை தமிழகத்தை சுற்றியுள்ள 5 அண்டை மாநில மக்களின் துயர் தீர்க்கவும் நிதியை வாரி வழங்கியிருக்கிறார் விஜய். ஆம், கேரளாவிற்கு ரூ.10 லட்சம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநில முதல்வர்களின் நிவாரணத்திற்காக தலா 5 லட்சம் வீதமும் நிதி அறிவித்துள்ளார். தாமதமாக நிதியை அறிவித்தாலும், தமிழகத்தையும் தாண்டி பிற மாநிலங்களையும் சேர்த்து யோசித்த தளபதி விஜய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios