Thalapathy Vijay Cute Fight : கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரபல நடிகர் சித்தார்த் அவர்களின் "எனக்குள் ஒருவன்" திரைப்படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக தமிழ் திரை உலகில் களம் இறங்கியவர் தான் விவேக் வேல்முருகன்.

கலைத்துறையில் தான் அறிமுகமான இரண்டாவது ஆண்டே சுமார் 20க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் பாடல்கள் எழுதி பெரிய அளவில் புகழ்பெற்ற பாடல் ஆசிரியர் தான் திரு. விவேக் அவர்கள். குறிப்பாக தளபதி விஜய் அவர்களின் ரசிகராக அவருடைய பல திரைப்படங்களில் நல்ல பல பாடல்களை எழுதி புகழ் பெற்றிருக்கிறார்.

மெர்சல் திரைப்படத்தில் வந்த "ஆளப்போறான் தமிழன்" மற்றும் சர்க்கார் திரைப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களையும் எழுதியது விவேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு தளபதி விஜய் அவர்களுடைய நடிப்பில், தமன் இசையில் வெளியான வாரிசு திரைப்படத்தில் வந்த அனைத்து பாடல்களையும் எழுதியது திரு. விவேக் அவர்கள் தான். 

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பரபரப்பு!

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது படக்குழுவினர்களோடு இணைந்து நடிகர் விஜய் மற்றும் விவேக் ஆகிய இருவரும் கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்றை தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் பாடல் ஆசிரியர் விவேக். அதில் விவேக் பந்தை வேகமாக அடிக்க அது சிக்சராக போய் விழுகின்றது . 

Scroll to load tweet…

ஆனால் எதிர் அணியினர் அது 4 தான் என்று கூற, பக்கத்தில் நின்ற தளபதி விஜய் அது சிக்ஸ் தான் என்று சண்டைக்கு செல்கின்றார். மேலும் நீ அடித்தால் மட்டும் தான் அது சிக்சா என்று எதிர் அணியரோடு சண்டைபோடும் விஜய், இறுதியில் விவேக்கை பாராட்டுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. 

தளபதி விஜய் கூட நான் டான்ஸ் ஆடிருக்கேன்.. செம டான்சர் அவரு - மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்ட கத்ரீனா கைஃப்!