Beast: பீஸ்ட் படத்திலிருந்து வெளியான ட்ரைலர் ,12 மணி நேரத்தில் 22 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது. இந்த சூழலில், இணையத்தில், நெட்டிசன்கள் ட்ரைலரை பல்வேறு படங்களுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்
பீஸ்ட் படத்திலிருந்து வெளியான ட்ரைலர் ,12 மணி நேரத்தில் 22 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது. இந்த சூழலில், இணையத்தில், நெட்டிசன்கள் ட்ரைலரை பல்வேறு படங்களுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் பீஸ்ட். இந்த படம் வரும் ஏப்ரல் 13-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.

பான் இந்தியா திரைப்படம்:
பான் இந்தியா திரைப்படமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஜய்யின் என்ட்ரி மாஸ்:

நடிகர் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, ஷான் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படம் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக தயாராகி உள்ளது. பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியான நிலையில், அதில் விஜயின் என்ட்ரி மாஸாக உள்ளது.
பீஸ்ட் படத்தில் ட்ரைலர்:

ஏற்கனவே, பீஸ்ட் படத்தில் இருந்து வெளியாகியுள்ள பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் படத்தின் டிரைலர் வெளியானது. அதில், ஸ்பை ஏஜெண்டாக இருக்கும் விஜய் மால் ஒன்றில் அதிரடியாக மக்களை காப்பாற்றுகிறார் என்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தனர.
பல்வேறு படங்களுடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்:
டிரைலரை பார்த்து, நெட்டிசன்கள் பல்வேறு படங்களுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது இந்த படத்தின் கதை யோகி பாபுவின் படமான கூர்கா படத்தின் காபி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும், ஒரு ஆக்ஷன் காட்சியில் விஜய் கதவுகளை கொண்டு துப்பாக்கி சூட்டில் இருந்து தப்புவது போல காட்டப்பட்டு இருக்கும், இந்த காட்சியை கமல்ஹாசனின் விக்ரம் பட ட்ரைலருடன் ஒப்பிட்டு, இந்த சீன எங்கயோ டிஸ்கஸ் பண்ணப்ப லோகி, நெல்சன் ரெண்டு பேரும் இருந்துருக்காய்ங போல.. ஒன்னு சேந்தாப்ள எடுத்துருக்காய்ங.. அட்லீயும் கூட இருந்திருந்தா ஷாருக் படத்துலயும் கூட பாக்கலாம் என்று கலாய்த்துள்ளனர்.
