தளபதி வருகையின் போது... அரங்கத்தையே அதிரவிட்ட ரசிகர்களின் சத்தம்! வேற லெவல் வரவேற்பு கொடுத்த வீடியோ!

'லியோ' திரைப்படத்தின் வெற்றி விழா தற்போது மிக பிரமாண்டமாக நடந்து வரும் நிலையில், சற்று முன் தளபதி விஜய் என்ட்ரி கொடுத்த போது, ரசிகர்கள் அரங்கத்தையே அதிர வைத்துள்ளனர்.
 

thalapathy vijay arrived in leo success meet mma

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்த லியோ திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, லியோ படத்தின் வெற்றியை பிரமாண்டமாக கொண்டாடும் விதமாக, இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், இசை வெளியீட்டு விழாவுக்கு நிகராக 'லியோ' வெற்றி விழாவை ஏற்பாடு செய்துள்ளார்.

thalapathy vijay arrived in leo success meet mma

லைட் வெளிச்சத்தில் மின்னும் செட்... ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.. பிரபலங்கள் வருகை! களைகட்டும் லியோ வெற்றி விழா!

அதன்படி இன்று மாலை 6 மணிக்கு,  சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்கிய 'லியோ' சக்ஸஸ் மீட்டில், இப்படத்தில் நடித்துள்ள அணைத்து பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அதே நேரம் தற்போது நடிகை த்ரிஷா, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் உள்ளதால் அவர் கலந்து கொள்வது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. இவரை தவிர, இப்படத்தில் நடித்துள்ள கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மடோனா செபாஸ்டியன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

thalapathy vijay arrived in leo success meet mma

சற்று முன்னர் தளபதி விஜயும் 'லியோ' சக்ஸஸ் மீட்டுக்கு வருகை தந்தார். நிகழ்ச்சி துவங்கப்படுவதாக அறிவித்த 6 மணியில் இருந்தே எப்போது தளபதியின் தரிசனம் கிடைக்கும் என காத்திருந்த ரசிகர்கள், விஜய் உள்ளே... என்ட்ரி கொடுத்தபோது, அரங்கமே அதிர வைக்கும் அளவுக்கு கைகளை தட்டியும், தளபதி என கத்தியும் வரவேற்றனர். மேலும் இருபக்கமும் ஃபயர்  தெறிக்க, டான்ஸர்ஸ் நடனமாடி தளபதியை செம்ம மாஸாக வரவேற்றனர். இதுகுறித்த வீடியோஸ் தற்போது வைரலாகி வருகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios