தளபதி 67 படம் குறித்து, தற்போது இப்படத்தை தயாரிக்க உள்ள 7 ஸ்க்ரீன் நிறுவனம், அதிகார பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

'வாரிசு' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'தளபதி 67' படத்தில் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ள நிலையில், இப்படம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள், இயக்குனர் லோகேஷ் கனகராஜியிடம் அப்டேட் கேட்டு வந்த நிலையில், தற்போது இப்படம் குறித்து படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏற்கனவே விஜய் நடித்த வாரிசு மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக 'தளபதி 67' படத்தில் இணைந்தது மகிழ்ச்சி என்றும், தற்காலிகமாக இப்படத்திற்கு 'தளபதி 67' என பெயர் வைத்துள்ளோம். இப்படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். எஸ்.எஸ். லலித் குமார் மற்றும் கோ புரடியூசர் ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் தயாரிக்க உள்ளனர்.

தளபதி மகன்னா சும்மாவா..! இயக்குனராக மாறி பட்டையை கிளப்பும் சஞ்சய்... வெளியான ரீசன்ட் போட்டோஸ்!

'மாஸ்டர்' படத்திற்கு பின்னர் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜுடன் இணையும் இப்படத்தில், ராக் ஸ்டார் அனிருத் 4-வது முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்க உள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு, மனோஜ் பாரமஹம்சா ஒளிப்பதிவாளாராகவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்ற உள்ளனர். தினேஷ் மாஸ்டர் இப்படத்திற்கு நடனம் அமைக்க, அன்பரீவ் ஆக்ஷன் சண்டை காட்சி அமைக்கிறார். அதே போல் இப்படத்தில் டயலாக்குகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைத்து, ரத்னகுமார் மற்றும் தீராஜ் வைத்தி ஆகியோர் எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்டமாக நடந்த நடிகை பூர்ணாவின் வளைகாப்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..!

Scroll to load tweet…