’தளபதி 63’ படம் குறித்து அப்டேட்களை குறித்த நேரத்தில் வெளியிடுவோம்.அதுவரை  தொடர்ந்து கிளப்பப்பட்டு வரும் வதந்திகளை ரசிகர்கள் யாரும் நம்பவேண்டாம்’ என்று அப்படக் குழு சார்பாக ட்விட்டர் பதிவு போடப்பட்டுள்ளது.

கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய்,நயன்தாரா நடித்து வரும் ‘தளபதி 63’ படம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. முதலாவதாக இப்படத்தின் கதையை அட்லீ திருவிவிட்டார் என்று ஒரு உதவி இயக்குநர் நீதி மன்றத்தை நாடியுள்ளார். அடுத்து படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன் சர்ந்து ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் அச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. அடுத்ததாக படப்பிடிப்பில் எலெக்ட்ரீஷியன் ஒருவர் பலத்த காயமைடைந்து மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இறுதியாக நேற்று முன் தினம் மீனம்பாக்கம் அருகே இப்படத்திற்காக போடப்பட்ட செட்டில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இப்படிப்பட்ட தொடர் ஷாக் சர்ச்சைகள் படம் அடிபடிவதைத் தொடர்ந்து இன்று படக்குழு சார்பில் ஜெகதீஷ் என்பவர் ட்விட்டரில் ...தளபதி 63 படத்தின் சூட்டிங் தொடர்ந்து 70 நாட்களாக நடந்து வருகிறது. தற்போது 4-வது கட்டப் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. எங்களுடைய கடின உழைப்பு எல்லாம் தியேட்டரில் படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதற்காகத்தான். படம் பற்றிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் தகுந்த நேரத்தில் வெளியிடப்படும். அதுவரை பொறுமையாக காத்திருங்கள். வதந்திகளை நம்பாதீர்கள்’...என்று குறிப்பிட்டிருக்கிறார்.