சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'தர்பார்' படத்தை தொடர்ந்து, அடுத்தாக சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கம் படத்தில் நடிக்கிறார். தலைவரின் 168 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தின், அப்டேட் அடிக்கடி வெளியாகி வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் தான் இசையமைக்க உள்ளதாக இந்த படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ஒரு தகவல் உலா வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது சன் பிச்சர்ஸ் நிறுவனம், 168 ஆவது படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் ஒரு சில காரணங்களால், அனிரூத் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், அதனால் அவருக்கு பதில், இப்போது டி.இமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் இதோ...