லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தில் தற்போது விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். விரைவில் விஜய் – விஜய் சேதுபதி இருவரின் காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். 

இதையும் படிங்க: ரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனம் காட்டும் விஜய் - விஜய் சேதுபதி... தெறிக்கவிடும் "மாஸ்டர்" மூன்றாவது லுக்...!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்  நியூ இயர் ட்ரீட்டாக மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், பொங்கல் விருந்தாக செகன்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இரண்டு போஸ்டர்களிலும் விஜய்யின் தனித்துவமான லுக்குகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து அந்த இரண்டு போஸ்டர்களையும் உலக அளவில் விஜய் ரசிகர்கள் தாறுமாறு வைரலாக்கினர். 

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது. முதல் இரண்டு லுக்கிலும் இல்லாத விஜய் சேதுபதி, இதில் இடம் பிடித்ததால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஒரே நாளில் ஒரு மில்லியன் ட்வீட்டுகளுக்கு மேல் பகிரப்பட்டு, #MasterThirdlook ஹேஷ்டேக் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 

இந்த சமயத்தில் மாஸ்டர் படத்தின் இந்த போஸ்டரும் காப்பி தான் என நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் ஆதாரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே பர்ஸ்ட் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் காப்பி என்ன சோசியல் மீடியாவில் மீம்ஸ்கள் தீயாய் பரவியதால் தளபதி விஜய்யும் அவரது ரசிகர்களும் செம்ம ஆப்செட்டாகினர். 

இந்நிலையில் மூன்றாவது லுக், கமல் ஹாசனின் தேவர் மகன், சூப்பர் ஸ்டாரின் 2.O, பிரபாஸின் பாகுபலி, விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா, ஜீவா இருவேடங்களில் நடித்த சிங்கம் புலி என பல படங்களின் போஸ்டரை காப்பி அடித்திருப்பதாக நெட்டிசன்கள் மரண பங்கம் செய்து வருகின்றனர். 

இதையும் படிங்க: வேட்டி, சட்டையில் குடியரசு தினம் கொண்டாடிய இளைய தளபதி... வைரலாகும் நடிகர் விஜய் மகனின் ஸ்டைலிஷ் போட்டோ...!

இதுபோதாது என்று அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் போஸ்டரும், மாஸ்டர் மூன்றாவது லுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதால் அஜித் ரசிகர்களும் களம் இறங்கியுள்ளனர். அஜித்தின் ஸ்டைலை காப்பி அடிப்பதாக விஜய்யை தாறுமாறாக விமர்சிக்கும் தல ஃபேன்ஸ் #Valimai ஹேஷ்டேக்குடன் மரண பங்கம் செய்து வருகின்றனர்.