லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தில் தற்போது விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். விரைவில் விஜய் – விஜய் சேதுபதி இருவரின் காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்  நியூ இயர் ட்ரீட்டாக மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், பொங்கல் விருந்தாக செகன்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இரண்டு போஸ்டர்களிலும் விஜய்யின் தனித்துவமான லுக்குகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து அந்த இரண்டு போஸ்டர்களையும் உலக அளவில் விஜய் ரசிகர்கள் தாறுமாறு வைரலாக்கினர். 

இதற்கு முன்னதாக வெளியான போஸ்டர்களில் விஜய் சேதுபதி லுக் இல்லாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அறிவித்திருந்த படி சரியாக 5 மணிக்கு படக்குழுவினர் போஸ்டரை வெளியிட்டனர். அதில் விஜய் - விஜய் சேதுபதி நேருக்கு நேர் மோதிக்கொள்வது போன்று உள்ளது. இருவரும்  ரத்தம் சொட்ட சொட்ட ஒருவரை ஒருவர் பார்த்து ஆக்ரோஷமாக கத்துவது போன்று உள்ளது. 

 

இருவரும் சட்டை அணியாமல் வெறும் உடம்புடன் சண்டை போடுவது போன்ற அந்த மூன்றாவது லுக் போஸ்டரை பார்த்த விஜய் - விஜய்சேதுபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இருவரது வெறித்தனமும் தாறுமாறு ஹிட்டாகியுள்ளது. மூன்றாவது லுக் வெளியான ஒரு மணி நேரத்திலேயே ட்விட்டரில் #MasterThirdLook என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.