கடந்த 2009ம் ஆண்டு விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற ஓபனிங் பாடலான நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலுக்கு தந்தை விஜய்யுடன் சேர்ந்து நடனமாடினார் ஜேசன் சஞ்சய். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக வெளிநாட்டில் படித்து வருகிறார்.

சமீபத்தில் ஜங்ஷன் என்ற குறும்படத்தை சஞ்சய் இயக்கி நடித்திருந்தார். அதில் தன்னை ராகிங் செய்தவர்களை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். திரையில் அப்படியே அப்பாவை பிரதிபலித்ததாக பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். 

இதையும் படிங்க: வஓவர் கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்... கவர்ச்சி போட்டோ ஷூட்டால்... வாயடைத்து போன ரசிகர்கள்...!

விஜய் மகன் சஞ்சய்யின் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இன்று நாடு முழுவதும் 71ம் ஆண்டு குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேட்டி, சட்டையில் செம்ம ஸ்டைலாக குடியரசு தினம் கொண்டாடிய ஜேசன் சஞ்சயின் புகைப்படம் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது. 

இதையும் படிங்க: நடிகை குஷ்புவின் மகளா இது?.... உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லிம்மான போட்டோ...!

விஜய் போலவே அவரது மகன் மீதும் ஏகப்பட்ட அன்பு வைத்துள்ள அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு வைரலாக்கி வருகின்றனர். வேட்டி, சட்டையில் அப்படியே அப்பா விஜய் போலவே இருக்கும் சஞ்சயின் புகைப்படத்தை #இளையதளபதி என்ற ஹேஷ்டேக்குடன் விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.