சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகல வள்ளியாக வலம் வருபவர் குஷ்பு. சோசியல் மீடியாவில் தனது கருத்துக்களை தைரியமாக பதிவிடக்கூடியவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். அதில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக குஷ்பு நடிப்பதாக கூறப்படுகிறது. 

குஷ்பு அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது மகள்களுடன் எடுத்துக்கொண்ட பதிவேற்றி வருகிறார். அதில் சில நாட்களுக்கு முன்பு  குஷ்பூ மகள்களின் உடல் அமைப்பை பார்த்து கிண்டல் செய்த நெட்டிசனை சகட்டு மேனிக்கு  திட்டித்தீர்த்தார். இதையடுத்து கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்த குஷ்புவின் இளைய மகளான அனந்திதா சற்று இளைத்திருந்தார். அதே லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அனந்திதா எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதையும் படிங்க: ஓவர் கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்... கவர்ச்சி போட்டோ ஷூட்டால்... வாயடைத்து போன ரசிகர்கள்...!

தற்போது 16 வயதாகும் அனந்திதா, தீவிர  உடல் பயிற்சிகளை மேற்கொண்டு, உடல் எடையை கணிசமாக குறைத்துவிட்டார். இந்நிலையில் அனந்திதாவின் பிறந்தநாள் வந்துள்ளது, ஸ்பெஷல் தினத்திற்கு வந்த வாழ்த்துக்களால் அவர் சந்தோஷம் அடைந்து தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு புகைப்படத்துடன் நன்றி கூறியுள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். ரசிகர்களும் குஷ்பு மகள் அனந்திதாவா என வாய் பிளந்து பார்க்கின்றனர்.