பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும், போனி கபூர். இவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர்  ஆவார்.  இவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.கடந்த ஒரு சில வருடங்களாக தமிழ் படங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான, 'பிங்க்' படத்தின் ரீமேக்கை, தமிழில் நடிகர் அஜித்தை வைத்து 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில் ரீமேக்  செய்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  போனி கபூர் தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து தற்போது ‘வலிமை’ படத்தை தயாரித்து வருகிறார்.

இதையும் படிங்க: டீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்‌ஷி...! 

தற்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ள போனி கபூர் - ஹெச்.வினோத்- அஜித் ஆகியோர் வலிமை படத்தை எடுத்து வருகின்றனர். கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் மகாராஷ்டிராவில் உள்ள க்ரீன் ஏக்கர்ஸ் ஏரியாவில் வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் 23 வயதான  சரண் சாஹு என்பவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போனி கபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது பணியாளர்களில் ஒருவரான சரணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனக்கும் எனது மகளுக்கும் எவ்வித கொரோனா அறிகுறியும் இல்லை என்றும், இருப்பினும் போனி கபூர், ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:  அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்!

அதன் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் போனிகபூர் வீட்டில் பணியாற்றி வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிறைவடைந்த நிலையில் போனிகபூர் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளார். தற்போது போனி கபூர் வீட்டில் பணியாற்றிய 3 பணியாளர்களும் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: “காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பிருக்கு?... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...!

"மகிழ்ச்சியாக இதை பகிர்ந்து கொள்கிறேன். எனக்கும் என்னுடைய மகள்களுக்கும் எப்போதும் கொரோனா டெஸ்ட் முடிவு நெகட்டிவ் என்று தான் வந்திருக்கிறது. முதலில் கொரோனா பாசிட்டிவாக இருந்த மூன்று பணியாளர்களும் தற்போது முழுமையாக குணமடைந்து விட்டனர். அவர்களது பரிசோதனை முடிவு நெகட்டீவ் என்று வந்துள்ளது. எங்களது 14 நாள் home quarantine காலமும் முடிவு பெற்றுவிட்டது. இனி அனைத்தையும் புதிதாக தொடங்க உள்ளோம்" என போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.