“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார். கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார்.

 

ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஒட்டு மொத்தமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து ஏற்கனவே வெளியான தகவலில், இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லன்கள் என்றும், அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா நடிப்பதாகவும் கூறப்பட்டது. முதன் முறையாக இந்தி நடிகை ஹுயூமா குரேஷி  அஜித்துடன் ஜோடி நடித்துள்ளார். அஜித்திற்கே டப் கொடுக்கும் அளவிற்கு பைக் சீனில் செம்ம மாஸாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரஜினியைத் தொடர்ந்து அஜித்... கருப்பு மாஸ்குடன் காரில் குடும்பத்துடன் பயணிக்கும் வீடியோ...!

கொரோனா பிரச்சனை முடியாமல் படப்பிடிப்பை தொடங்க வேண்டாம் என தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதாவது படப்பிடிப்பில் பங்கேற்கும் தொழிலாளர்களுக்கு எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அஜித் அவ்வாறு கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் வலிமை படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. நடிகர் ராஜ் அய்யப்பா இதில் அஜித்தின் தம்பியாக நடிக்க உள்ளார் என்பது தான். அவர் அதர்வாவின் 100 என்ற படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.