Thala Ajith to pay Rs 20 crore in taxpayer - Mansoor Ali Khan
நடிகர் அஜித் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினால், அதில் 10 கோடி ரூபாய் வருமான வரி செலுத்திவிடுவார் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
சினிமாவுக்கான கேளிக்கை வரி அதிகரிக்கப்பட்டதையடுத்து, அதைப் பற்றி பல்வேறு செய்தித் தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடைப்பெற்றன.
அந்த வகையில், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டார்.
வழக்கம்போல தனக்கே உண்டான பட்டதை பட்டென்று பேசும் பாணியில் பேசி விளாசினார் மன்சூர் அலிகான்.
அப்போது அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, நடிகர் அஜித்தின் இயல்பு வாழ்க்கையையும், அவருடைய வரி செலுத்தும் குணத்தைப் பற்றியும் பேசினார். அதில், “நடிகர் அஜித் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினால், அதில் 10 கோடி ரூபாய் வருமான வரி செலுத்திவிடுவார்” என்ற தகவலைத் தெரிவித்தார்.
