Thala Ajith : தல அஜித் ஹைதராபாத் நகரில் தனது விலை உயர்ந்த பைக்கில் நகர் வளம் வரும் வீடியோ ஒன்று இப்பொது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.
துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் தான் விடாமுயற்சி. முதலில் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தல அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு பிரபல இயக்குனர் மகிழ் திருமேனியிடம் சென்றது.
ஆனால் இந்த பட பணிகள் ஆரம்பித்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட பொழுது, இன்றளவும் பெரிய அளவில் இப்படத்தின் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இன்றளவும் வெளியாகவில்லை என்றால் அது மிகையல்ல. அது அவருடைய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
13 வயதில் ஹீரோயின்! இளம் நடிகருடன் காதல் தோல்வி? வாய்ப்புக்காக ஏங்கும் இந்த ஹீரோயின் யார் தெரியுமா?
இந்த சூழலில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க தல அஜித் ஒப்பந்தமானார். குட் பேட் அக்லி என்கின்ற அந்த திரைப்படம் உருவாகத் துவங்கிய வெகு சில நாட்களிலேயே அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதியும் வெளியானது.
அதற்கு ஏற்றார் போல விடாமுயற்சி திரைப்படத்தை கிடப்பில் போட்ட தல அஜித், ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்திருக்கிறார். அடுத்த கட்டமாக படக்குழு ரஷ்யா செல்ல உள்ள நிலையில் ஹைதராபாத் சாலைகளில் தனது காஸ்ட்லியான பைக்கில் தல அஜித் உலா செல்லும் வீடியோ ஒன்று இப்பொழுது இணையத்தில் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
