- Home
- Gallery
- 13 வயதில் ஹீரோயின்! இளம் நடிகருடன் காதல் தோல்வி? வாய்ப்புக்காக ஏங்கும் இந்த ஹீரோயின் யார் தெரியுமா?
13 வயதில் ஹீரோயின்! இளம் நடிகருடன் காதல் தோல்வி? வாய்ப்புக்காக ஏங்கும் இந்த ஹீரோயின் யார் தெரியுமா?
கேரளாவை சேர்ந்த, நடிகை லட்சுமி மேனனின் குழந்தை பருவ புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகையாகவும், பரதநாட்டிய கலைஞராகவும் அறியப்படும் லட்சுமி மேனன் 8-ஆம் வகுப்பு படிக்கும் போதே, மலையாளத்தில் ஹீரோயினாக நடிக்க துவங்கியவர். 2011-ஆம் ஆண்டு, இவரது பரதநாட்டியம் ஒளிபரப்பின் போது அவரைப் பார்த்த மலையாள இயக்குனர் வினயன், தனது ரகுவின்டே ஸ்வாந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் அவரை நடிக்க வைத்தார்.
இதை தொடர்ந்து அலி அக்பர் இயக்கிய இட்லி ஜோடி என்ற மற்றொரு மலையாளப் படத்தில் வினீத்துடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார் லட்சுமி மேனன். பின்னர் இயக்குனர் பிரபு சாலமன், நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து இயக்கிய 'கும்கி' படத்தில், லட்சுமி மேனனை கதாநாயகியாக நடிக்க வைத்தார். அவரது நடிப்பைப் பார்த்து, இயக்குனர் பிரபாகரன், கும்கிக்கு முன் வெளிவந்து அவரது தமிழ் அறிமுகத்தைக் குறிக்கும் சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.
கிராமத்து வேடத்திற்கு பொருந்தி நடித்திருந்தார் லட்சுமி மேனன். மேலும் சசிகுமார் மற்றும் லட்சுமி மேனன் காம்பினேஷன் அதிகம் ரசிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 'குட்டிப்புலி' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற திரைப்படங்களில் அடுத்தடுத்த நடித்த நிலையில், இருவரும் காதலித்து வந்ததாகவும் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாகவும் கிசுகிசுக்கள் எழுந்தது.
இந்த காதல் கிசுகிசுவுக்கு பின்னர் லட்சுமி மேனனின் திரை வாழ்க்கையும் மெல்ல மெல்ல சரிவை சந்தித்த நிலையில், ஒரு கட்டத்தில்... அஜித்துக்கு தங்கையாக நடிக்கும் அளவுக்கு மாறினார்.
Atlee: இந்திய சினிமாவில் யாரும் பெறாத மிகப்பெரிய சம்பளம்.? அட்லீயை வளைத்து போட்ட அஜித் பட நிறுவனம்!
மேலும் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த 'ரெக்க' திரைப்படம் சிறகொடிந்து படுத்து விட்டதால்... லட்சுமி மேனன் ஒரேயடியாக கேரளாவுக்கு மூட்டையை கட்டினார். 5 ஆண்டுகளுக்கு பின்னர் புலிக்குத்தி பாண்டி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் முதலுக்கு மோசமில்லாமல் வெற்றி பெற்ற நிலையில், சந்திரமுகி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது யோகி பாபுவுடன் மலை என்கிற படத்திலும் சப்தம் எங்கிற ஹாரர் படத்திலும் நடித்து வருகிறார். திருமணம் கை கூடி வந்த போதும் மீண்டும் பட வாய்ப்பு கிடைத்ததால், தமிழ் திரையுலகில் கவனம் செலுத்தும் லட்சுமி மேனன் தொடர்ந்து பட வாய்ப்புக்காக ஏங்கி வருகிறார். இவரது குழந்தை பருவ புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.