Vani Bhojan: தூங்கி எழுந்த முகம், கலைந்த முடியோடு.. நீ சோம்பல் முறிப்பதும் அழகு! வாணி போஜனின் மார்னிங் பிக்ஸ்!
நடிகை வாணி போஜன் முகம் கூட கழுவாமல்... காலை தூங்கி எழுந்ததும் எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Vani Bhojan Morning Photos
சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கு, இயக்குனர்கள் திரைப்பட வாய்ப்புகள் கொடுக்க மிகவும் தயங்கிய காலங்கள் உள்ளது. காரணம் சினிமாவில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் சீரியல்களில் ஓவர் ஆக்டிங் செய்தால் மட்டுமே ஈடுபடும்.
Vani Bhojan Morning Photos
எனவே சீரியலில் நடிப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், ஓவர் ஆக்ட்டிங் மூலம் தத்ரூபமாக நடிக்கும் காட்சிகளில் சொதப்பி விடுவார்கள் என்பதே காரணமாக கூறப்பட்டது. ஆனால் சமீப காலமாக, வெள்ளித்திரையை டார்கெட் செய்யும் நடிகர் - நடிகைகளின் முதல் டார்கெட் சின்னத்திரையாக தான் உள்ளது.
Atlee: இந்திய சினிமாவில் யாரும் பெறாத மிகப்பெரிய சம்பளம்.? அட்லீயை வளைத்து போட்ட அஜித் பட நிறுவனம்!
Vani Bhojan Morning Photos
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று, வெற்றி பெற்ற முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் வாணி போஜன். விமான பணிப்பெண்ணாக பணியாற்றிய இவருக்கு சின்னத்திரை வாய்ப்பு கிடைத்து எதிர்பாராமல் தான்.
Vani Bhojan Morning Photos
கிடைத்த வாய்ப்பை தவற விடாமல், கெட்டியாக பிடித்து கொண்ட இவர், தெய்வமகள் சீரியலில் நடிக்க அந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார். அடுத்தடுத்து சீரியல் வாய்ப்பு வந்து கொண்டிருந்த போது சில படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
Vani Bhojan Morning Photos
ஆரம்பத்தில் இவர் தமிழில் நடித்த படங்களின் கதை தேர்வில் கோட்டை விட்டாலும், பின்னர் அசோக் செல்வனுடன் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வரும் வாணி, வெப் சீரிஸ்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சமூக வலைத்தளத்திலும் படு ஆக்ட்டிவாக இருக்கும் வாணி போஜன் அவவ்போது ரசிகர்கள் மனதை மயக்கும் விதத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
Vani Bhojan Morning Photos
அந்த வகையில், தற்போது தூங்கி எழுந்த முகத்துடன், கலைந்து போன முடி... சோமல் முறித்தபடியும், கையில் காபியுடனும் வெளியிட்டுள்ள போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.