​நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் -  போனிகபூர் - அஜித் கூட்டணி வலிமை திரைப்படம் மூலமாக மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக ‘வலிமை’ திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் படம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தல அஜித்தின் வலிமை படம் குறித்து அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். “வலிமை படத்தின் update கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு... படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு அஜித் குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து "வலிமை" படத்தின் update குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளி இடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்” என கூறியிருந்தார்.

 

இதையும் படிங்க: “எப்போதும் எங்கள் மகாராணி”... பாட்டியுடன் இருக்கும் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து ஜி.வி.பிரகாஷ் உருக்கம்...!

இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் சுரேஷ் சந்திராவை மாற்றும் படி #thalachangeyourpro என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். புத்தாண்டில் வலிமை படம் குறித்து அசத்தல் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்திருந்தார். இதனால் குஷியான ரசிகர்கள் புத்தாண்டு அன்று தல பட அப்டேட்டை கொண்டாட காத்திருக்கிறார்களாம்... அதை தெரிவிக்கவே #காத்திருக்கிறோம்தல என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க:  பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த நயன்தாரா... பிரபல இயக்குநர் பரப்பிய வதந்தி பற்றி பரபரப்பு அறிக்கை வெளியீடு!

மற்றொருபுறம் மாஸ்டர் பட போஸ்டர்கள், டீசர், பாடல்கள் என ஆரம்பித்து தற்போது ரிலீஸ் தேதி வரை விஜய் அறிவித்து விட்டார். இதையடுத்து கடந்த ஒருவாரமாகவே ட்விட்டரில் மாஸ்டர் தொடர்பான ஏதாவது ஒரு ஹேஷ்டேக் ட்ரண்டாகி வருவதை காண முடிகிறது. இதனால் நொந்து போன ரசிகர்கள் தங்களுடைய வெயிட்டங்கை அஜித்தின் பார்வைக்கு கொண்டு செல்லவே இப்படியொரு ஹேஷ்டேக்கை ட்ரெண்டு செய்து வருவதாக தெரிகிறது.