* நான் இயக்கப்போகும் அடுத்த படம் அஜித்சார் படம் இல்லை. என்னோட அடுத்த படத்தை வெளியிலதான் பண்றேன். அதுக்கான பேச்சுவார்த்தை நடக்குது!: என்று இயக்குநர் சிறுத்தை சிவா கூறியிருக்கிறார். (ஆஹா! ஆஹா! இந்த வார்த்தையை கேட்கத்தானே ஒருவருஷமா தவம் கிடந்தீங்க அஜித் ரசிகர்களே. சிறுத்தையே சொன்னபிறகு என்ன டவுட்டு? சந்தோஷத்துல தலை சுத்துதா? ஸ்வீட் எடு, கொண்டாடு.)

* கருணாநிதி இறந்ததற்குப் பிறகு கோபாலபுரம் வீட்டில் மின்சார பயன்பாடு வெகுவாய் குறைந்துவிட்டது: செய்தி. (மெயின் ஃபியூஸே போன பிறகு எப்படிங்க லைட் எரியும்? லைட்டே எரியலேன்னா மீட்டர் என்னத்த ஓடி, சார்ஜ் ஏறி?)

* ஜெயலலிதாவின் வாழ்க்கையை வைத்து எடுக்கப்படும் ‘தி அயர்ன் லேடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியது. நித்யாமேனனா அல்லது ஜெயலலிதாவா என்று தெரிய அளவுக்கு உருவம் பொருந்திப் போயிருக்கிறது: செய்தி. (ஓ.கே. எப்படியும் படத்துல பஞ்சாயத்துகள் கொடிகட்டி பறக்கும், ஸ்டிக்கர் பாய்ஸ் ஆல் ஸ்டாண்ட் அப் அண்டு கம் டு பொசிஸன்)

* வெறும் தூறலுக்கெல்லாம் பள்ளிக்கு லீவு இனிமேல் கிடையாது. மழையின் அளவு அதிகமாக இருக்குமா, எந்த பகுதிகளில் பாதிப்பு இருக்கும்? என்பதையெல்லாம் கவனித்து, கணித்து அதற்கேற்ப ஆலோசித்தே முடிவெடுத்து லீவு விடப்படும்: அரசு தகவல். (தூறலுக்கெல்லாம் லீவு விடமாட்டாங்க, ஆனா எம்.ஜி.ஆர். விழா மாதிரி அரசாங்கம் நடத்துற ஃபங்ஷனுக்கெல்லாம் கத்திரி வெயிலே அடிச்சாலும் ‘கனமழை அபாயம் உள்ளது’ன்னு  சொல்லி லீவு விட்டுடுவோம்.)

* நிச்சயம்! மத்திய மற்றும் மாநில ஆட்சிகள் தொலைந்திடும் நாள் தொலைவில் இல்லை. கூடிய விரைவில் நல்லிணக்க ஆட்சிகள் இரு இடங்களிலும் மலரும்: மு.க. ஸ்டாலின். (தல....ம்ம்ம்முடியல தல! இதே டயலாக்க கேட்டு கேட்டு புளிச்சுப் போயி காதுகளே கண்டமாகிடுச்சு. அதுங்காட்டி வேற எதுனா ட்ரை பண்ணுங்க. கொஞ்ச நாளைக்கு அத சொல்லி ஓட்டுவோம்.