சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது. கொரோனா உருவான சீனாவை விட, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. 

இத்தாலியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஸ்பெய்னில் 3500 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெய்னில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டிவிட்டது. அமெரிக்காவிலும் கொரோனா கோர முகத்தை காட்டிவருகிறது. 

இதையும் படிங்க: கொரோனா ஊரடங்கு... பிரசவ வலியில் கதறி துடித்த கர்ப்பிணிக்கு உதவிய நடிகை ரோஜா...!

உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இந்தியாவில் கொரோனாவால் 629 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவிலிருந்து தப்பிக்க, வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காதலருடன் டாப்லெஸ் போட்டோ, கொரோனா முத்தம்.... வீட்டில் இருக்க சொன்னால் ஆபாச நடிகையின் அட்டகாசம்...!

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை கழுவுவதே ஒரே வழி என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பில்லா படத்தில் தல அஜித் கை கழுவும் சீனை வைத்து தல ஃபேன்ஸ் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வரும் வீடியோ இதோ...