- Home
- Cinema
- Actor Nani: பெண்களுக்கு பெரிய கும்பிடு! சடை வளர்ப்பது இவ்வளவு கஷ்டமா? நடிகர் நானி சொன்ன விஷயம்
Actor Nani: பெண்களுக்கு பெரிய கும்பிடு! சடை வளர்ப்பது இவ்வளவு கஷ்டமா? நடிகர் நானி சொன்ன விஷயம்
Actor Nani: எப்படித்தான் பெண்கள் தங்களது கூந்தலை வாழ்நாள் முழுவதும் பராமரிக்கிறார்களோ? இதற்காக பெண்களுக்கு பெரிய கும்பிடு போடலாம் என்று நடிகர் நானி தெரிவித்துள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

The Paradise
தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரான நானி, தற்போது ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகும் ‘The Paradise’ திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். ரஃகாவ் ஜுயால், காயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் நடனம் ஆடியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
ஹீரோ சடை பின்னியிருந்தால் ரசிகர்கள் ஏற்பார்களா?
‘The Paradise’ படத்திற்காக நடிகர் நானி நீளமான முடி, சடை போன்ற வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதற்காக சுமார் 160 நாட்கள் அந்த நீளமான சடையைப் பராமரிக்க வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பட விழாவில் கூந்தல் பராமரிப்பு குறித்து அவர் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
சடை தோற்றம் குறித்து நானிக்கு இருந்த சந்தேகம்
படத்தில் ஹீரோ சடை பின்னிய தோற்றத்தில் இருப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எனக்கு இருந்தது. பெண்கள் சடை பின்னியிருப்பதை ரசிக்கலாம். ஆனால் ஒரு ஹீரோ சடை பின்னியிருந்தால் ரசிகர்கள் ஏற்பார்களா? என்ற கேள்வி இருந்தது. இருந்தாலும் கதாபாத்திரத்துக்காக அந்த தோற்றத்தை தைரியமாக ஏற்று நடித்தேன். தற்போது ரசிகர்கள் அதை ஏற்றுக்கொண்டனர்.
கூந்தலை பராமரிப்பது அவ்வளவு எளிதல்ல
படவிழாவில் பேசிய நானி, “ நீளமான முடி மற்றும் சடை பின்னிய தோற்றத்தில் நடிப்பது, அதை பராமரிப்பது தனக்கு மிகவும் சவாலாக இருந்தது. மூடியை நீளமாக வளர்த்து சடை பின்னி பராமரிப்பது மிகவும் கடினம். படப்பிடிப்பு நடைபெற்ற 160 நாட்களும் நான் இந்த தோற்றத்துடன் இருந்தது எனக்கு சிரமமாக இருந்தது.
பெண்களுக்கு பெரிய கும்பிடு
எப்படித்தான் பெண்கள் தங்களது கூந்தலை வாழ்நாள் முழுவதும் பராமரிக்கிறார்களோ? இதற்காக பெண்களுக்கு பெரிய கும்பிடு போடலாம். இந்த அனுபவத்துக்குப் பிறகு பெண்கள் மீது தனக்கு கூடுதல் மரியாதை ஏற்பட்டுள்ளது என நானி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

