இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை குறைப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பிற துறைகளை காட்டிலும் திரைப்பட துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மொழி திரைப்பட தொழிலாளர்களுக்கும் உதவும் விதமாக அந்தந்த மொழிகளைச் சேர்ந்த தொழிலாளர் சங்கத்தினர் நிதி திரட்டி வருகின்றனர். மேலும் அரசின் கொரோனா நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டுமென மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி அவர்களும், மாநில அரசு சார்பில் முதலமைச்சர் பழனிசாமி அவர்களும் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மொத்தமாய் அள்ளி கொடுத்த ஐ.பி.எஸ். அதிகாரி.... குவியும் பாராட்டுக்கள்...!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய் அவர்கள் நிதி உதவி வழங்காதது மிகப்பெரிய குற்றச்சாட்டாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தல அஜித் மத்திய அரசின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 1.25 கோடி ரூபாயை ஒரே நாளில் நிதியாக வாரிக்கொடுத்துள்ளார். அஜித்தின் இந்த செயலை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.