Asianet News TamilAsianet News Tamil

அடுத்த அட்லியாக மாறிவிட்டாரா ஆதிக்? அஜித் படத்துக்காக ஹாலிவுட் பட டைட்டிலே அபேஸ் பண்ணிருக்காரேப்பா..!

Good Bad Ugly : பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்தபடியாக உருவாக உள்ள திரைப்படம் தான் தல அஜித்தின் Good Bad Ugly. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இப்பொது வெளியாகியுள்ளது.

Thala Ajith 63 Named Good Bad Ugly did adhik ravichandran took title from hollywood ans
Author
First Published Mar 14, 2024, 8:04 PM IST

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஜிவி பிரகாஷின் "திரிஷா இல்லனா நயன்தாரா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன். அதனைத் தொடர்ந்து சிம்புவின் "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார். 

அதனைத் தொடர்ந்து வெளியான "பகீரா" என்கின்ற திரைப்படமும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுக்காத நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "மார்க் ஆண்டனி" என்கின்ற திரைப்படம் ரவிச்சந்திரனுக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது. இந்த சூழலில் அவர் தனது கனவு நாயகனான அஜித்குமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. 

ஆரம்பமே அலப்பறையா இருக்கே! 'குட் பேட் அக்லி' டைட்டில் போஸ்டருடன்.. அஜித்தின் அடுத்த பட தேதியும் வெளியானது!

அந்த திரைப்படம் தல அஜித்தின் 63வது திரைப்படமாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது 62வது திரைப்படமான "விடாமுயற்சி" திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தார் நடிகர் அஜித்குமார். சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக அப்பிட பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், விரைவில் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு இவ்வாண்டு இறுதிக்குள் அந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சூழலில் அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு உற்சாக செய்தியாக அவருடைய 63வது திரைப்படம் குறித்த அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது. Good Bad Ugly என்கின்ற தலைப்புடன் அஜித் குமார் திரைப்படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவிருக்கிறது. இதில் கூடுதல் சிறப்பாக எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Thala Ajith 63 Named Good Bad Ugly did adhik ravichandran took title from hollywood ans

இந்த சூழலில் கடந்த 1966 ஆம் ஆண்டு, ஹாலிவுட் உலகில் புகழ்பெற்ற நடிகாரண கிளின்ட் ஈஸ்ட்வுட் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தின் தலைப்பைதான் ஆதிக் இந்த திரைப்படத்திற்கு சூட்டியிருப்பதாக கூறப்படுகிறது. 1966 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படத்தின் டைட்டில் "The Good The Bad And The Ugly" என்பதாகும். இது இணையத்தில் இப்பொது பேசுபொருளாக மாறியுள்ளது.

பாடலாசிரியர் கமல்ஹாசன் வரிகளில்.. லோகேஷ் மற்றும் ஸ்ருதி இணையும் "Inimel" - வெளியான அட்டகாசமான அறிவிப்பு!

Follow Us:
Download App:
  • android
  • ios