தல அஜித் தற்போது, இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நிலையில், AK 63 படத்தின் தலைப்பு தற்போது ரிலீஸ் தேதியோடு வெளியாகியுள்ளது. 

தல அஜித், துணிவு படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தை இயக்குவார் என லைக்கா நிறுவனம் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

சுமார் 70 சதவீதத்திற்கும் மேல், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில்... விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நாளை அஜர்பைஜான் நாட்டில் துவங்க உள்ளதாக சமீபத்தில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்கிற கேள்வி எழுந்தபோது, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சற்று முன்னர் அஜித்தின் ஏகே 63 படத்தின் அறிவிப்பு டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியோடு வெளியாகியுள்ளது.

தனுஷ் யார் மகன்? உரிமை கொண்டாடிய மதுரை தம்பதி! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்த படத்திற்கு 'குட் பேட் அக்லீ' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் ரிலீஸாக இப்படம் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மைதிலி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. விரைவில் இந்த படத்தின் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியிட்டுள்ள போஸ்டரில், துப்பாக்கி, இரும்பு முள் கம்பி போன்றவற்றை பார்க்க முடிகிறது. மேலும் ரத்தம் தெறிப்பது போலவும் இருக்கிறது. எனவே இப்படம் போலீசை மையப்படுத்திய திரைப்படமா? அல்லது கேங்ஸ்டார் படமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. வித்தியாசமான டைட்டிலுடன் வெளியாகியுள்ள இந்த படத்தின் போஸ்டரை அஜித்தின் ரசிகர்கள் தாறுமாறாக வைரலாக்கி வருகிறார்கள்.

Scroll to load tweet…