LokeshKanagaraj's Inimel : பிரபல நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ் கமல் நிறுவனத்தின் சார்பாக இனிமேல் என்ற புதிய மியூசிக் ஆல்பம் விரைவில் வெளியாகவுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய தயாரிப்பில் புதிய மியூசிக் ஆல்பம் ஒன்று உருவாக உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதில் உலக நாயகன் கமலஹாசனின் அவர்களுடைய மகள் ஸ்ருதிஹாசன் அவர்களும், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இந்த சூழ்நிலையில் இன்று அந்த மியூசிக் ஆல்பத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து "இனிமேல்" என்கின்ற அந்த மியூசிக் ஆல்பம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த மியூசிக் ஆல்பத்திற்கு பாடல் ஆசிரியராக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் பாடல்களை எழுதியுள்ளார். 

சில்வர் கலர் ட்ரஸ்ஸில் பளிங்கு சிலை போல் மின்னும் பாவனா... க்யூட் கிளிக்ஸ் இதோ..

இந்த பாடலை கம்போஸ் செய்துள்ளது ஸ்ருதிஹாசன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய மியூசிக் ஆல்பத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பங்கு என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் Introducing லோகேஷ் கனகராஜ் என்று அறிவித்துள்ள நிலையில், முற்றிலும் மாறுபட்ட ஒரு துறையை லோகேஷ் இந்த ஆல்பத்தில் ஏற்றிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…

"இனிமேல்" என்ற இந்த ஆல்பம் எதை குறித்து என்பது இனிமேல் தான் தெரியவரும். ஆனால் முற்றிலும் மாறுபட்ட ஒரு வகையில் லோகேஷ் இதில் இணைவார் என்பது உறுதி.

Rashmika: நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகாவின் டோக்கியோ டைரி! ஒரே கொண்டாட்டம் தான் போல.. வைரலாகும் போட்டோஸ்!