Tenth Meeting Team waiting for Mercel success ...
மெர்சல் படத்தின் வெற்றிக்காக காத்திருப்பதாக தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
வரும் தீபாவளி அன்று, மெர்சல் படம் திரைக்கு வரவுள்ளது.
அட்லி இயக்கியுள்ள இப்படத்தில், விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளனர். அவருக்கு ஜோடியாக நித்யாமேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகிய கதாநாயகிகள் ஜோடி சேர்ந்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடக்கம் முதலே படத்தின் வெளியீட்டிற்கு பல்வேறு தடங்கள் ஏற்பட்டாலும், அனைத்து தடைகளையும் மீறி வீர நடைப் போட்டு மெர்சல் அரசல் வரப்போகிறான்.
தீபாவளியன்று மெர்சல் வெற்றிகரமாக திரைக்கு வரும் நிலையில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சொடுக்கு பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், சொடுக்கு பாடலுக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மெர்சல் படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
