தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர். ராம்சரண், அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் ஆகஸ்ட் மாதம் முடியும் வரை படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டோம் என ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டுவிட்டார்களாம்.

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே முடங்கி கிடந்த சினிமா உலகம் தற்போது தான் கொஞ்சம் புத்துணர்வு பெற ஆரம்பித்துள்ளது. இறுதி கட்டத்தில் இருக்கும் பட வேலைகளை முடிக்க ஏதுவாக போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை முடிக்க ஏதுவாக போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கும், ஊரடங்கால் வேலை இழந்து வாடும் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சீரியல் படப்பிடிப்புகளையும் நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: தள்ளாத வயதில் தலைக்கேறிய காமம்... 67 வயது ஆபாச பட நடிகருக்கு 90 ஆண்டுகள் ஜெயில்...!

தமிழகத்தில் இதுவரை சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில்,தெலங்கானாவில் படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைவான ஆட்கள் மற்றும் முறையான தடுப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். இதையடுத்து நடிகர் சிரஞ்சீவி தலைமையிலான தெலுங்கு திரையுல பிரமுகர்கள், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தனர். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், நடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் ராஜமவுலி, தயாரிப்பாளர்கள் சி.கல்யாண், தில்ராஜு ஆகியோர் பங்கேற்றனர். 

தெலுங்கு சினிமாவின் பரிதாப நிலையை எடுத்துரைத்து கெஞ்சி கூத்தாடி, படப்பிடிப்பிற்கு அனுமதி கேட்டனர். மெகா ஸ்டார் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் ஜூலை 15ம் தேதி முதல் படப்பிடிகளை நடத்திக்கொள்ள அனுமதி அளித்தார். மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ள சந்தோஷத்தில் குஷியாக இருந்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் தலையில் டோலிவுட் நடிகர், நடிகைகள் கல்லைத் தூக்கி போட்டுள்ளனர். 

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர். ராம்சரண், அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் ஆகஸ்ட் மாதம் முடியும் வரை படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டோம் என ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டுவிட்டார்களாம். இதனால் இரு மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து பர்மிஷன் வாங்கி கொடுத்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி செம்ம கடுப்பில் உள்ளாராம். இதில் முதலில் இருப்பது அவருடைய மகன் ராம்சரண் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறாராம்.