Asianet News TamilAsianet News Tamil

தள்ளாத வயதில் தலைக்கேறிய காமம்... 67 வயது ஆபாச பட நடிகருக்கு 90 ஆண்டுகள் ஜெயில்...!

இதுகுறித்து ரான் ஜெர்மி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Adult Flim Star Ron Jeremy Charged For Rape and Sexual Assault Case
Author
Chenani, First Published Jun 24, 2020, 3:00 PM IST

ஆபாச பட உலகில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் ரான் ஜெர்மி, இவர் 1970ம் ஆண்டு முதல் அந்த மாதிரியான படங்களில் நடித்து வருகிறார். 67 வயதாகும் ஜெர்மி இதுவரை 2000க்கும் மேற்பட்ட ஆபாச படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான ஐந்து வருடங்களில் சுமார் நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தது. 

Adult Flim Star Ron Jeremy Charged For Rape and Sexual Assault Case

 

இதையும் படிங்க:  மனைவி சங்கீதாவுடன், தளபதி விஜய்... கலக்கல் ஜோடியின் அரிய புகைப்பட தொகுப்பு...!

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அந்த பெண்கள் அனைவரும் 25 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முதலில் 2014ம் ஆண்டு 25 வயது பெண் ஒருவரை தனது வெஸ்ட் ஹாலிவுட் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 2017ம் ஆண்டு 33 வயது பெண்ணையும், அதே ஆண்டு 46 வயதுடைய பெண் ஒருவரையும் அதே வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இறுதியாக  2019ம் ஆண்டு ஜூலை மாதம் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. 

Adult Flim Star Ron Jeremy Charged For Rape and Sexual Assault Case

 

இதையும் படிங்க:  கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

இதுகுறித்து ரான் ஜெர்மி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 90 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரான் ஜெர்மி,  ’தான் இதுவரை ஒரு பெண்ணையும் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios