பிரபல இளம் நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு.. சோகத்தில் திரையுலகம்..
பிரபல தெலுங்கு நடிகர் ஹரிகாந்த், மாரடைப்பு காரணமாக ஜூலை 1 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 33.

நாடக கலைஞராக பிரபலமாக அறியப்பட்ட ஹரிகாந்த் கடந்த 2 ஆண்டுகளாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல படங்களில் சிறிய வேடங்கள் மற்றும் துணை கதாப்பாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். தற்போது ‘கீடா கோலா’ படத்தில் பிஸியாக இருந்தார். தருண் பாஸ்கர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த டீசரில் ஹரிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.
ஜூலை 1 அதிகாலை ஹரிகாந்த்தின் உயிர் பிரிந்ததாக தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரின் மறைவுவுக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கீடா கோலா படத்தின் இயக்குனர் தருண் பாஸ்கர், ஹரிகாந்தின் மறைவுச் செய்தியை மனவேதனை அடைந்ததாக இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ஹரிகாந்தின் நடிப்பு ஆர்வத்தைப் பாராட்டிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் நாடகத்துறையில் ஈடுபட்டு வருவதை வெளிப்படுத்தினார். பாஸ்கர் ஹரிகாந்தின் திறமையை உணர்ந்து, கீடா கோலா படத்திற்காக ஹரிகாந்தை நடித்த தருணத்தை நினைவு கூர்ந்தார்.
மேலும் அவரின் பதிவில் “ மிகச்சிறந்த மேடை கலைஞராக இருந்த ஹரிகாந்தின் நடிப்பை பார்த்த உடன், அவரை கீடா கோலா படத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்தேன். இந்த படத்திலும் அவர் நல்ல வேடத்தில் நடித்துள்ளார். நேற்று தான் படக்குழுவை சந்தித்து, போஸ்ட் புரொடக்ஷன் குறித்து கேட்டு விட்டு சென்றார். ஆனால் இன்று அவர் இல்லை. வாழ்க்கை மிகவும் கணிக்க முடியாததாக உள்ளது.இவ்வளவு இளம் வயதில் அவர் உயிரிழந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது ” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் ஹரிகாந்தின் அகால மரணம் தெலுங்கு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒரு திறமையான மற்றும் நம்பிக்கைக்குரிய நடிகரை இழந்துவிட்டதாக பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், நாடகம் மற்றும் சினிமா ஆகிய இரண்டிலும் அவரின் பங்களிப்பு குறித்து பல்வேறு பிரபலங்களும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
ஹரிகாந்த் நடித்த கீடா கோலா படப்பிடிப்பே இன்னும் முடியாத சூழலில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரிகாந்தின் கடைசி படமாக மாறி உள்ள கீடா கோலா இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவிலும் இன்றுவரை சாதி பாகுபாடு பெரும் சவாலாக இருந்து வருகிறது; பா. ரஞ்சித் டுவீட்!!
- Cardiac
- Death
- Harikanth
- Harikanth Death
- Harikanth Death cause
- Heart Attack
- Keeda Cola
- Latest News English
- Movie-English
- Telugu
- Telugu Cinema
- Tharun Bhascker
- Theatre Artist
- Young Age
- actor harikanth
- actor harikanth passes away
- biography of harikanth
- harikanth actor death
- harikanth actor died
- harikanth age
- harikanth biography
- harikanth death cause
- harikanth demise cause
- harikanth list of movies
- harikanth movie lists
- kida cola
- kida cola movie actor death
- kida kola movie actor harikanth
- who is actor harikanth