Telangana board question paper goes viral after it mentions Jr NTRs Role in RRR: சுமார் 50 நாட்களை கடந்தும் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் ஆர்ஆர்ஆர்' படத்தில் ஜூனியர் என்டிஆரின் 'கொமரம் பீம்' கதாபாத்திரம் குறித்து, தெலுங்கு பொது தேர்வில்கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் 'ஆர் ஆர் ஆர்' . கடந்த மார்ச் 25 ம் தேதி வெளியான இந்த ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் 2022-ம் ஆண்டு வெளியான நம்பர் 1 படம் என்ற சாதனையை படைத்தது. இந்த படம் வசூலில் தூள் கிளப்பி 1000 கிளப்பிலும் இணைந்துள்ளது.

கதைக்களம்:
1920-களில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ராமராஜு, பீம் ஆகியோர் வாழ்க்கை கதையை முழுக்க முழுக்க கற்பனை கலந்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆர் ஆர் ஆர். படத்தில், முதல் பாதி முழுவதும் ஜூனியர் என்.டி.ஆரின் ஆதிக்கம், இரண்டாம் பாதி முழுவதும் ராம்சரணின் கதாபாத்திரத்திற்கு ஆதிக்கம் இருந்தது ரசிகர்களை கொண்டாட வைத்தது.

ஜூனியர் என்.டி.ஆர்:
இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மஸான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதிலாபாத் என்கிற காட்டுப்பகுதியில் தன் இன மக்களின் காப்பாளனாக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர். தன்னுடைய இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் வெள்ளைக்காரர்கள் வசம் சென்றுள்ளார்..

இதையறிந்த ஜூனியர் என்.டி.ஆர். அந்தப் பொண்ணை வெள்ளைக்காரர்களிட இருந்து மீட்க இவர் பயன்படுத்திய உக்திகள் படத்தில் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பிலும் பின்னி பெடலெடுத்துள்ளார். இவருக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கொமரம் பீம் கதாபாத்திரம்:
இந்நிலையில், 50 நாட்களை கடந்தும் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் ஆர்ஆர்ஆர்' படத்தில் ஜூனியர் என்டிஆரின் 'கொமரம் பீம்' கதாபாத்திரம் குறித்து தெலுங்கு பொது தேர்வில் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதில், நீங்கள் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தையும், கொமரம் பீமாக ஜூனியர் என்டிஆரின் நடிப்பையும் பார்த்திருப்பீர்கள். படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, பிரபல டிவி சேனலில் நீங்கள் நிருபராக இருக்கும் போது, ஜூனியர் என்.டி.ஆரை நேர்காணல் செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் எந்த மாதிரியான கேள்விகளை கேட்பீர்கள் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை மையமாக வைத்து சிந்தித்து பாருங்கள்.

ஜூனியர் என்.டி.ஆரை பற்றி தெலுங்கு பொது தேர்வில்:
1. படத்தின் கதைக்களம் எப்படிப்பட்டது..?
2. படத்தில் கொமரம் பீமாவிற்கும், இயக்குனருக்கும் இடையேயான உறவு என்ன..?
3. படத்தின் திரைக்கதை எப்படி இருந்தது..?
4. படத்தில் மற்ற நடிகர்களின் ஈடுபாடு எவ்வாறு இருந்தது ..?
5. திரைப்படத்தின் தாக்கம் பார்வையாளர்கள் மீது எப்படி இருந்தது..?
என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
