Asianet News TamilAsianet News Tamil

Pushpa: ஒரு கோடிப்பு.... வைரல் ஹிட் அடித்த புஷ்பா படத்தின் ‘சாமி சாமி’ பாடல்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் 'புஷ்பா' திரைப்படத்தில் இடம்பெறும்  ‘சாமி சாமி’ பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி செந்தில்கணேஷ் பாடி உள்ளார்.

Tamil version of Saami Saami from pushpa movie hits 1 Crore Views
Author
Tamil Nadu, First Published Nov 21, 2021, 10:37 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்...  அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.  இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Tamil version of Saami Saami from pushpa movie hits 1 Crore Views

மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. 

இரண்டு பாகமாக இப்படம் வெளியாகி உள்ளது. முதல் பாகம் வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது. இரண்டாம் பாகத்தை அடுத்தாண்டு வெளியிட உள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

Tamil version of Saami Saami from pushpa movie hits 1 Crore Views

இப்படத்தில் இடம்பெறும் 3 பாடல்களை இதுவரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அண்மையில் வெளியிடப்பட்ட சாமி சாமி என்கிற பாடல் தமிழ் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், யூடியூபில் இப்பாடலின் லிரிக்கல் வீடியோ 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழு உற்சாகமடைந்துள்ளனர். இப்பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி செந்தில்கணேஷ் பாடி இருந்தார். இப்பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios