தமிழகம் - கேரளம் சந்திக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகான பள்ளத்தாக்கு பகுதி அட்டப்பாடி. அந்த பகுதி கேரளத்துடன் இணைக்கப்பட்ட போதும் அங்கு வாழ்பவர்கள் அனைவரும் தமிழ் பழங்குடி மக்கள் ஆவர். நாளடைவில்  அவர்களது தாய் மொழியான தமிழில் மலையாளம் கலந்த போதும், பெரிதாக பேச்சு வழக்கில் மாற்றங்கள் ஏற்படவில்லை. அதை எடுத்துக்காட்டும் விதமாக சமீபத்தில் வெளியான “அய்யப்பனும் கோஷியும்” என்ற மலையாளப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: அஜித் அப்பா, அம்மா இவங்க தான்... இதுவரை யாருமே பார்த்திடாத அசத்தல் போட்டோ...!

திரைக்கதையாசிரியர் சச்சி இயக்கத்தில், பிரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளியான திரைப்படம் “அய்யப்பனும் கோஷியும்”. இந்த படத்தில் அய்யப்பன் நாயரை அட்டப்பாடி தமிழ் பழங்குடியாக காட்சிப்படுத்தியுள்ள இயக்குநர், பிரத்யேக பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

அந்த படத்தில் இடம் பெற்ற ‘களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு’ என்ற பாடல் உலக அளவில் பேமஸ் ஆகிவிட்டது. அட்டப்பாடியில் வசிக்கும் ஒரு தமிழ் பழங்குடிப் பெண்ணால் இட்டுக்கட்டி பாடப்பட்ட அந்த பாடல் ஒரு மலையாளப் பாடல் போல் தோன்றினாலும் காதுகளை நன்றாக தீட்டிவைத்து உற்றுக் கவனித்தால் அதுவொரு தமிழ்  பாடல் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

iஇதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

பழங்குடியின பெண்ணான நஞ்சியம்மாவின் குரலில் இசையும், வரிகளும் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. தமிழும், கொஞ்சம் மலையாள வாடையும் கலந்திருக்கும் இந்த பாடலை நீங்களே கேட்டு மகிழுங்கள்...