Tamil rockers accept the director request Delete the movie chennai 2 singapore
சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பரின் வேண்டுகோளை ஏற்று அந்தப் படத்தை தனது வலைதள பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது தமிழ் ராக்கரஸ் இணையதளம்.
புதிய திரைப்படங்கள் திரைக்கு வந்த அடுத்த சில மணி நேரங்களில் இணைய தளங்களில் வெளியிடப்பட்டு வந்தது. அதில் மிகவும் பிரபலமான இணையதளமான தமிழ் ராக்கர்ஸ்.
இதற்கு திரைத் துறையினர் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், திரைத்துரையினரில் பலரும் மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், சென்னை 2 சிங்கப்பூர் திரைப்படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர், தமிழ் ராக்கர்ஸ் அட்மினுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், தனது சென்னை 2 சிங்கப்பூர் திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதள பக்கத்தில் இருந்து நீக்கி விட வேண்டும் என்றும், ஒரு மாதம் கழித்து வேண்டுமென்றால், அப்லோடு செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இயக்குனர் அப்பாஸின் வேண்டுகோளை ஏற்ற தமிழ் ராக்கரஸ் இணையதளம், சென்னை 2 சிங்கப்பூர் படத்தை தனது வலைதளத்தில் இருந்து எடுத்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளது.
