"விலைவாசி எகிறிப்போச்சு".. சினிமா டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை.. நிறைவேற்றப்படுமா?
சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்குமாறு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

ஏற்கனவே திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணம் விண்ணைமுட்டும் அளவிற்கு உள்ளது என்று மக்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஆனால் திரையரங்கள் உரிமையாளர்கள் சங்கம் தற்போது ஒரு கோரிக்கையை தமிழக அரசின் முன் வைத்துள்ளனர்.
இறுதியாக கடந்த 2017ம் ஆண்டு சினிமா டிக்கெட் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் அதன் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக ஏராளமான செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையிலும், பெரும்தொற்று ஏற்படுத்தி சென்ற மாபெரும் சேதத்தையும் தொடர்ந்து தங்களுக்கு சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்குமாறு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : சும்மா மிரட்டிவிடுங்க H.வினோத்.. கமல்ஹாசன் 233 வெளியான மாஸ் அப்டேட்!
தமிழகத்தை பொறுத்தவரை திரையரங்குகளில் மூன்று விதமான கட்டடங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஒரு வகையாகவும், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் ஒரு விதமாகவும் மற்றும் INOX திரையரங்குகளில் ஒரு விதமாகவும் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் பன்னீர்செல்வம் மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு 250 ரூபாயாகவும், AC திரையரங்குகளுக்கு 200 ரூபாயாகவும், AC இல்லாத திரையரங்குகளுக்கு 120 ரூபாயாகவும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : விபத்தை ஏற்படுத்திய TTF வாசன்! உடைந்து சிதறிய காரின் முன்பகுதி!