RISE TO RULE.. சும்மா மிரட்டிவிடுங்க H.வினோத்.. கமல்ஹாசன் 233 வெளியான மாஸ் அப்டேட்!
பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் K திரைப்படத்தின் பணிகளை முடித்த பிறகு, கமல் தனது 233வது பட பணியில் இணைவார்

கடந்த 2014ம் ஆண்டு வெளியான "சதுரங்க வேட்டை" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர்தான் எச். வினோத். அதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை வலிமை மற்றும் துணிவு என்று பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் அவர்.
தன்னுடைய திரைப்படத்திற்காக அதிக முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குனர்களில் இவரும் ஒருவர். அமைதியான சுபாவமும், நேர்த்தியான கதை அமைப்பும் இவரை ஒரு சிறந்த இயக்குனராக உருவாக்கி உள்ளது என்றால் அது மிகையல்ல. தற்பொழுது உலக நாயகன் கமல்ஹாசனின் 233வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் K திரைப்படத்தின் பணிகளை முடித்த பிறகு, கமல் தனது 233வைத்து பட பணியில் இணைவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்பொழுது வெளியான தகவலின் படி இந்த Kamal233 படத்தின் தலைப்பில் RISE TO RULE என்ற வாசகம் அடங்கியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இந்த படம் அரசியல் சார்ந்த ஒரு படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : மோத தயாராகும் விஷால் & ராகவா லாரன்ஸ்!