தமிழக அரசின் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா..நேரலை
இன்று நடைபெற்று வரும் விருது வழங்கும் விழாவில் தற்போது நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பாக தலைசிறந்த படங்களுகள் மற்றும் சின்னத்திரைக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான திரைப்படங்கள், சின்னத்திரை நெடுந்தொடர், மாணவர்கள் இயக்கிய குறும்படம் ஆகியவற்றிக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
மேலும் செய்திகளுக்கு...பிரபாஸ் படத்தில் இணைந்துள்ள சூர்யா, துல்கர் சல்மான்...வேற லெவல் காம்போவை காண காத்திருக்கும் ரசிகர்கள்
இன்று நடைபெற்று வரும் விருது வழங்கும் விழாவில் தற்போது நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் திரைப்பட மற்றும் செய்து துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அறநிலைய துறை பி. கே. சேகர்பாபு, சென்னை மேயர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..வாடிவாசல் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வெற்றி மாறன்..வைரல் வீடியோ !
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் இந்த விழாவில் முதல் பரிசாக ரூ. 2 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ. 1 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது. அதேபோல் சிறப்பு பரிசாக 75 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர், நடிகை, மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என சுமார் 160 பேருக்கும், சின்னத்திரையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை வெளியான, சிறந்த நெடுதொடர் தயாரிப்பாளர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. சிறந்த சீரியல் நடிகர், சீரியல் நடிகை, மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் 81 பேருக்கு மூன்று பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டுக்கான திரைப்பட விருது :
மலையன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை கரண்.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பிரசன்னா
சிறந்த குண சித்திர நடிகருக்கான விருதை மலையாண்டி படத்திற்காக சரத் பாபு
சிறந்த குணச்சித்திர நடிகை ரேணுகா
சிறந்த இயக்குனருக்கான விருது வசந்தபாலன் (அங்காடித்தெரு)
சிறந்த உரையாடலுக்கான பரிசு பசங்க திரைப்படத்திற்காக இயக்குனர் பாண்டியராஜ்
சிறந்த பின்னணி பாடகி மகதி
சிறந்த இசையமைப்பாளர் நாடோடி திரைப்படம் சுந்தர் சி பாலன்
சிறந்த குழந்தை நட்சத்திரம் கிஷோர் ( பசங்க )
சிறந்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரீ ராம் (பசங்க )
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது மனோஜ் பரமஹம்சா (ஈரம் )