யானை படத்தை பார்த்த வனிதா விஜயகுமார்..தன் அண்ணனுக்கு என்ன சொன்னார் தெரியுமா?
வனிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக விஜயகுமாரின் மொத்த குடும்பமும் அவரை விலக்கி வைத்துள்ளது.. இருந்தும் வனிதா தனது தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து உட்பட எந்த முக்கிய தருணங்களிலும் தனது வாழ்த்துக்களை பகிர மறப்பதில்லை.
யானை (yaanai ) திரைப்படம் :
ஹரி - அருண் விஜய் கூட்டணியில் யானை படம் இன்று திரையரங்குளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் வைப்புகளை பரப்பி வரும் இந்த படம் ஹரியின் நான்கு ஆண்டு கேப்பிற்கு பிறகு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதை சூர்யாவுக்காக புனையப்பட்டது என கூறப்படுகிறது.
ஹரி -சூர்யா கூட்டணி :
முன்னதாக சிங்கம் 1, சிங்கம் 2 என அடுத்தடுத்த அதிரடி பாகங்களை ரசிகர்களுக்கு கொடுத்த கூட்டணி மீண்டும் இணைவதாக பல ஆண்டுகளுக்கு முன்னர் பேச்சு எழுந்தது. இதுகுறித்தான சந்திப்பும் நிகழ்ந்தது. ஆனால் சூர்யா எதற்கும் துணிந்தவன், வாடிவாசல், பாலா கூட்டணி என நகர்ந்து விட்டதால் இந்த திட்டம் ட்ராப்பாவதாக தகவல் பரவியது.
மேலும் செய்திகளுக்கு... Mahesh Babu : பில்கேட்ஸ் உடன் மகேஷ் பாபு சந்திப்பு... இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ
அருண்விஜயுடன் (arunvijay )கூட்டணி அமைத்த ஹரி :
பின்னர் கடுப்பான ஹரி தனது மைத்துனன் அருண் விஜயை நோக்கி தனது பார்வையை திருப்பினார். ஏற்கனவே உருவான கதைக்களத்திற்கு ஏற்ப நாயகன் அருண்விஜயும் தயாரானார். முன்னதாக நாயகன் சூர்யா, வில்லன் பிரகாஷ் ராஜ் என முடிவாகி இருந்த நிலையில் பிரகாஷ் ராஜும் பின்வாங்க சமுத்திரக்கனி வில்லனானார்.
யானை (Yaanai) பட்டாளம் :
அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, இவர்களுடன் சமுத்திரக்கனி , யோகிபாபு, அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி, ராஜேஷ், ஐஸ்வர்யா, சஞ்சீவ், புகழ் உள்ளிட்டோர் நடிக்க ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது யானை. ஒளிப்பதிவு கோபி, படத்தொகுப்பை ஆண்டனி இசை ஜி.வி.பிரகாஷ் குமார் என தடபுடலாக உருவாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு... Pathu Thala : சிம்பு கேங்ஸ்டராக நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு
யானை எப்படி இருக்கு ? (yaanai movie review ) :
கதை ராமநாதபுரத்தை சுற்றி நிகழ்கிறது. அங்கு PRV குடும்பத்தை சேர்ந்தவர் அருண்விஜய். ஊரில் மதிப்பு மிக்க குடும்பமாக PRV வீட்டின் இளைய மகன் கதாநாயகன் ரவிச்சந்திரன் (அருண் விஜய்) . எதிரியாக இருப்பவர் ஜெயபாலன் (சமுத்திரம கனி ) அவரது மகன் லிங்கம் (ராமச்சந்திர ராஜு) தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். அதோடு நாயகனின் உறவினரான வில்லன் தனது குடும்ப உறுப்பினர்கள் மரணத்திற்கு ரவிசந்திரன் குடும்பம் தான் காரணம் என எண்ணி அவர்களை கொல்ல முனைகிறார். இதில் நாயகன் எவ்வாறு தனது குடும்பத்தை காத்து நிற்கிறார் என்பதே படத்தின் கதையாகும்.
வனிதாவின் வாழ்த்து :
இன்று ஜூலை 1 வெளியான இந்த படம் கிராமத்து நாயகனின் கதையாக அமைந்தது வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் பார்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அருண்விஜய்யின் சகோதரியான வனிதா விஜகுமார், கடின உழைப்பும் விடாமுயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது என குறிப்பிட்ட வாழ்த்து கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு... Shruti Haasan: மோசமான பிரச்சனையால் அவதிப்படும் ஸ்ருதிஹாசன்... என்னாச்சு தெரியுமா? உடல் நிலை குறித்து ஓபன் டாக்
வனிதாவை ஒதுக்கி வைத்த விஜயகுமார் :
பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கு அருண் விஜய் , வனிதா விஜய்குமார் , ஸ்ரீதேவி விஜய்குமார் , ப்ரீத்தா விஜயகுமார் , அனிதா விஜயகுமார் , கவிதா விஜயகுமார் 6 பிள்ளைகள் உள்ளனர். இதில் அருண் மூத்த மனைவியான முத்துக்கண்ணுவின் மகன். வனிதா உள்ளிட்ட சகோதரிகள் இரண்டாவது மனைவியும் நடிகையுமான மறைந்த மஞ்சுளாவின் பிள்ளைகள். இவர்களில் வனிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக விஜயகுமாரின் மொத்த குடும்பமும் அவரை விலக்கி வைத்துள்ளது.. இருந்தும் வனிதா தனது தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து உட்பட எந்த முக்கிய தருணங்களிலும் தனது வாழ்த்துக்களை பகிர மறப்பதில்லை.