Shruti Haasan: மோசமான பிரச்சனையால் அவதிப்படும் ஸ்ருதிஹாசன்... என்னாச்சு தெரியுமா? உடல் நிலை குறித்து ஓபன் டாக்
Shruti haasan health tips: பிரபல தமிழ் நடிகை ஸ்ருதிஹாசன் தான் மோசமான பிசிஓஎஸ் என்ற ஹார்மோன் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக சமீபத்திய வீடியோ ஒன்றில் தகவல் தெரிவித்துள்ளார்.
shruti haasan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், உலக நாயகன் கமல் அவர்களின் மூத்த மகள் ஆவார். இவர், தற்போது புகைப்பட கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதர் முறையில் பெங்களூரில் வாழ்ந்து வருகிறார்கள். அவ்வப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வருகிறார்கள். இதனால், இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.
shruti haasan
இந்நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் தான் மோசமான பிசிஓஎஸ் என்ற ஹார்மோன் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனது உடல்நிலை தற்போது சரியாக இல்லை. பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றால் மோசமான ஹார்மோன் பிரச்சனைகளை நான் எதிர்கொள்கிறேன். இதனால், சீரற்ற மாதவிடாய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதை பெண்கள் அறிவார்கள்.
shruti haasan
எனவே, இது போன்ற கடினமான சூழ்நிலைகளை கையாளுவதற்கு ஆரோக்கிய உணவு மற்றும் நல்ல தூக்கம் ஆகியவற்றை பின்பற்றுகிறேன். இதனை நான் ஒரு போரட்டமாக பார்க்காமல், என் உடல் அதன் சிறந்ததைச் செய்யும் ஒரு இயல்பான இயக்கமாக அதை ஏற்றுக்கொள்கிறேன். இந்த ஒரு சவாலான பயணம் .அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
Shruti Haasan
PCOS மற்றும் PCOD பிசிஓடி பிரச்சனையின் பாதிப்புகள்:
இன்றைய நவீன வாழ்கை முறையில் பெரும்பாலான பெண்களுக்கு PCOS மற்றும் PCOD பிசிஓடி பிரச்சனை ஏற்படுகிறது. ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கும், மனமகிழ்ச்சிக்கும் ஒரு முக்கியக் காரணமாகும். எனவே, PCOS மற்றும் PCOD பிசிஓடி பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்கள் மாதவிடாய் கோளாறுகள், கருத்தரிப்பதில் சிக்கல், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடற்பயிற்சி மற்றும் உணவு முறையில் மாற்றம்:
சீரான உணவுடன் வழக்கமான உடற்பயிற்சி PCOS அறிகுறிகளை மேம்படுத்த உதவும் எனக்கின்ற்னர் மருத்துவர்கள். எனவே, நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், முட்டை, பாதாம், கீரைகள் கடல் உணவுகள் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவை பிசிஓஎஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.
Shruti Haasan
எவற்றை தவிர்த்தல் அவசியம்:
அதேபோன்று, மன அழுத்தம், பதற்றம் போன்றவை உங்கள் ஹார்மோன் அளவை பாதிக்கிறது. இதனால் பி.சி.ஓ.எஸ் பாதிப்பு ஏற்படும். எனவே மன அழுத்தம் இல்லாமல் இருங்கள். பெண்கள் ஐஸ்கிரீம், பழச்சாறுகள், சோடா, பேக்கரி பண்டங்கள், நெய் மற்றும் பாஸ்ட்புட் போன்ற அதிக கார்போஹைட்ரேடுகள் நிறைந்த உணவுப்பொருள்களை சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.