Mahesh Babu : பில்கேட்ஸ் உடன் மகேஷ் பாபு சந்திப்பு... இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ

Mahesh Babu : நடிகர் மகேஷ் பாபு, உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவருமான பில் கேட்ஸை சந்தித்து அவருடன் போட்டோவும் எடுத்துள்ளார். 

Tollywood Actor Mahesh Babu meet Bill gates Photo Storms internet

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் அண்மையில் சர்காரு வாரிபாட்டா என்கிற திரைப்படம் வெளியானது. பரசுராம் இயக்கிய இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இதையடுத்து நடிகர் ராஜமவுலி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் மகேஷ் பாபு.

இதையும் படியுங்கள்... 2022-ன் முதல் பாதி ஓவர்! விஜய், அஜித் சொதப்பினாலும் தமிழ் சினிமாவில் வசூலை வாரிக்குவித்த படங்களின் லிஸ்ட் இதோ

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்து பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி, அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை. இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 42 வயதிலும் குறையாத கவர்ச்சி... பிகினி உடையணிந்து கடலில் மிதக்கும் வாளமீனு மாளவிகா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் மகேஷ் பாபு, உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவருமான பில் கேட்ஸை சந்தித்து அவருடன் போட்டோவும் எடுத்துள்ளார். இந்த தருணத்தின் போது மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதாவும் உடன் இருந்தார்.

இதையும் படியுங்கள்... பஞ்சதந்திரம் 2-வில் அஜித்... பிரபலத்தின் கருத்துக்கு குவியும் லைக்ஸ் - ஓகே சொல்வாரா ஏகே?

Tollywood Actor Mahesh Babu meet Bill gates Photo Storms internet

இந்த சந்திப்பு குறித்து நடிகர் மகேஷ் பாபு கூறியதாவது : “பில்கேட்ஸை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த உலகம் கண்ட மிகப் பெரிய தொலைநோக்கு பார்வையை கொண்டவர் பில்கேட்ஸ். மிகவும் பணிவான மனிதர். உண்மையிலேலே இவர் ஒரு உத்வேகம்" என பதிவிட்டுள்ளார். இவர்கள் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios