42 வயதிலும் தாராள கவர்ச்சி... பிகினி உடையணிந்து கடலில் மிதக்கும் வாளமீனு மாளவிகா - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த மாளவிகா அங்கு பிகினி உடையணிந்து கடலில் மிதந்தவாறு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
சுந்தர் சி இயக்கிய உன்னைத் தேடி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா. கடந்த 1999-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. இதையடுத்து ஆனந்த பூங்காற்றே படத்தில் மீண்டும் அஜித்துக்கு ஜோடியாக நடித்த மாளவிகாவுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
பின்னர் சேரன் இயக்கிய வெற்றிக் கொடிகட்டு, சரத்குமார் உடன் ஐயா, ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த மாளவிகா, மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படம் மூலம் மிகவும் பேமஸ் ஆனார். இப்படத்தில் இடம்பெறும் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்கிற பாடல் நடிகை மாளவிகாவை மிகவும் பாப்புலர் ஆக்கியது.
இதையும் படியுங்கள்... பஞ்சதந்திரம் 2-வில் அஜித்... பிரபலத்தின் கருத்துக்கு குவியும் லைக்ஸ் - ஓகே சொல்வாரா ஏகே?
இதையடுத்து கவர்ச்சி அவதாரம் எடுத்த மாளவிகா, திருட்டு பயலே, வியாபாரி, நான் அவன் இல்லை என அடுத்தடுத்த படங்களில் கிளாமராக நடித்து இளசுகளை கவர்ந்தார். இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் கடந்த 2007-ம் ஆண்டு சுரேஷ் மேனன் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படியுங்கள்... Rolex ரேஞ்சுக்கு சூர்யாவுக்கு ஒரு ரோல்... ராக்கெட்ரி மூலம் மாதவன் சாதித்தாரா? சோதித்தாரா? - முழு விமர்சனம் இதோ
திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நடிகை மாளவிகா, இல்லற வாழ்வில் கவனம் செலுத்தி வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சுமார் 13 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த மாளவிகா சமீபத்தில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள கோல்மால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாளவிகா.
இதையும் படியுங்கள்... மின்னும் கிளாமரில் விஜய் பட நாயகி.. ஓவர் லோ நெக்..தொடை ஸ்டைல் என கலங்கடிக்கும் மாளவிகா!
தற்போது 42 வயதாகும் நடிகை மாளவிகா, இன்றளவும் கவர்ச்சியை கைவிடவில்லை. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அதில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த மாளவிகா அங்கு பிகினி உடையணிந்து கடலில் மிதந்தவாறு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.