பிரபல தயாரிப்பாளர் டி.எம்.ஜெயமுருகன் மாரடைப்பால் மரணம்!
தமிழில் சினிமாவில் பன்முக திறமையாராக இருந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
மன்சூர் அலிகானை ஹீரோவாக வைத்து சிந்துபாத் படத்தை தயாரித்தவர் தான் டி.எம்.ஜெயமுருகன். இந்த படம் தோல்வியை தழுவிய நிலையில், இயக்குனராக களமிறங்கினார். அப்படி இவர் இயக்கிய முதல் படம் தான் ரோஜா மலரே. முரளி நடிப்பில் 1997-ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி வெற்றிபெற்றது. தயாரிப்பாளராக தோற்றாலும், இயக்குனராக முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த டி.எம்.ஜெயமுருகன், இதை தொடர்ந்து, புருஷன் எனக்கு அரசன், தீ இவன், அடடா என்ன அழகு போன்ற படங்களை இயக்கினார்.
இதில் நடிகர் கார்த்திக் ஹீரோவாக நடித்த தீ இவன் திரைப்படம் மட்டுமே ஓரளவு பேசப்பட்டது. மேலும் அடடா என்ன அழகு மற்றும் தீ இவன் படங்களுக்கு டி.எம்.ஜெயமுருகனே இசையமைத்திருந்தார்.
விஜயகாந்த் கூட சூப்பர் ஹிட் படத்துல நான் தான் நடிக்கவேண்டியது; அனிதா புஷ்பவனம் பகிர்ந்த தகவல்!
பன்முக திறமையாளராக இருந்தும், அதிகம் ஜொலிக்கப்படாமல் போன ஜெயமுருகன் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சொந்த ஊரான திருப்பூரில் வசித்து வந்த ஜெயமுருகனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.
திருணம் ஆன 2 வருடங்களுக்கு பின் சன் டிவி சீரியல் நடிகை ப்ரீத்தி குமார் கூறிய குட் நியூஸ்!
அவரின் உடல் இன்று திருப்பூரில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர், இவருக்கு தங்களின் இரங்கல்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.