Vinayagar Chathurthi : நடிகைகள் சாக்‌ஷி அகர்வால், கீர்த்தி சுரேஷ், பிரணிதா சுபாஷ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், ஆண்ட்ரியா உள்பட ஏராளமான திரைப்பிரபலங்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி உள்ளனர். 

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சரிவர கொண்டாடப்படாமல் இருந்த இந்த பண்டிகை இந்த ஆண்டு சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீட்டில் விநாயகர் சிலை வாங்கி வைத்து அதனை தரிசித்து கொண்டாடி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இன்று பெரும்பாலான கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் சியான் விம்ரமின் கோப்ரா மற்றும் பா.இரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது ஆகிய திரைப்படங்கள் இன்று ரிலீசாகி உள்ளன. இதனால் திரையரங்குகளும் விழாக்கோலம் பூண்டுள்ளன.

அதுமட்டுமின்றி ஏராளமான திரையுலக பிரபலங்களும் இன்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி அவர்கள் போட்டுள்ள சமூக வலைதள பதிவுகளும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, நீண்ட பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... கம்பேக் கொடுத்தாரா விக்ரம்..! சியானின் ‘கோப்ரா’ சாதித்ததா?... சோதித்ததா? - விமர்சனம் இதோ

அதில் “அன்றொரு விநாயகர் சதுர்த்தியன்று நான் ”start camera” சொல்ல, இன்றுவரை Single shot ஆக நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது! Non linear-ஆக புற வெற்றிகள் முன் பின் வந்து போன வண்ணம் இருக்க, மனம் என்னவோ எண்ணியதை(உலகின் முதல் முயற்சி-இரவின் நிழல்)செய்து அதற்கு இளைஞர்களிடம் கிடைத்த வரவேற்பு. 

globally கிடைக்கும் விருதுகள் என மகிழ்ந்தே நிறைகிறது. குடைக்குள் V.நாயகரை சுமந்து வந்ததும், மூன்றாம் நாள் கடலில் கரைக்க மனமழுத இளம் பருவம் கண்முன்னே கரையாமல்,கரையாத பிள்ளையாரை செதுக்கி தந்துவிட்டு சென்ற சிற்பி திரு பாஸ்கருக்கு நன்றி கொண்டாடுபவர்கள் மகிழ்ச்சியில் திண்டாட வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதுதவிர நடிகைகள் சாக்‌ஷி அகர்வால், கீர்த்தி சுரேஷ், பிரணிதா சுபாஷ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், ஆண்ட்ரியா ஆகியோரும், நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், மகத் ராகவேந்திரா ஆகியோரும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... விஜயின் செல்ல பிராணியை முடிவு செய்த தளபதி 67 டீம்..படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
View post on Instagram
View post on Instagram
View post on Instagram
View post on Instagram
View post on Instagram
View post on Instagram