கம்பேக் கொடுத்தாரா விக்ரம்..! சியானின் ‘கோப்ரா’ சாதித்ததா?... சோதித்ததா? - விமர்சனம் இதோ
cobra review : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, இர்பான் பதான், மீனாட்சி நடிப்பில் வெளியாகி இருக்கும் கோப்ரா படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ.
சியான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீசாகி உள்ளது.
கோப்ரா படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழகத்தில் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு கோப்ரா படத்தின் FDFS திரையிடப்பட்டது. இப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் விக்ரம் மற்றும் கோப்ரா படக்குழுவினர் கண்டுகளித்தனர்.
இதையும் படியுங்கள்... கல்யாணத்தை போல்... ஹனிமூனையும் ஒரு ரூபா செலவில்லாமல் முடித்ததா விக்கி - நயன் ஜோடி? - வெளியான புதுத் தகவல்
கோப்ரா திரைப்படம் மூன்று மணிநேரம் மூன்று நிமிடம் மூன்று விநாடி நீளம் கொண்ட படமாகும். இப்படத்தின் முதல் பாதி முடிந்துள்ள நிலையில், அதுகுறித்த விமர்சனங்களும் டுவிட்டரில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
அதன்படி கோப்ரா படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது: கோப்ரா படத்தின் முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், விக்ரமும், அவரின் வித்தியாசமான கெட் அப்களும் சிறப்பாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையும் பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்து இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒரு சில காட்சிகள் தொய்வை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கதாபாத்திர தேர்வு சூப்பர் என்றும் இண்டர்வல் பிளாக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு டுவிட்டர் பதிவில், “படத்தின் காதல் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துவதாகவும் மற்றபடி படம் சூப்பர் என்றும் அதுவும் இண்டர்வல் பிளாக் வாவ் என குறிப்பிட்டுள்ள அவர், சீட்டின் நுனியில் அமர வைத்து விட்டதாக பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “படத்தின் முதல் பாதி சூப்பராக இருந்ததாகவும், இண்டர்வல் வேறலெவல் என்றும் ஒன்றரை மணிநேரம் போனதே தெரியல எனவும் பதிவிட்டுள்ளார்.
முதல் பாதி குறித்து நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “முதல் பாதியின் கிரிஞ் ஆன காதல் காட்சிகள் இருந்தாலும் நன்றாக உள்ளது. இண்டர்வல் வெறித்தனம். கொலை செய்யும் காட்சிகள் புல்லரிக்க வைக்கின்றன. ஏ.ஆர்.ரகுமான் கடவுள் என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், “படத்தின் முதல் பாதி நெருப்பாக இருப்பதாகவும், சியான் விக்ரம் இஸ் பேக் என்றும் குறிப்பிட்டுள்ள நெட்டிசன், அவரின் நடிப்பு தாறுமாறாக இருப்பதாக பாராட்டி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை சூப்பராக இருப்பதாக பதிவிட்டுள்ள அவர் 5க்கு 4 மதிப்பெண்களும் கொடுத்துள்ளார்.
மேற்கண்ட பதிவுகளை பார்க்கும் போது படத்துக்கு பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வருவதால், இது சியான் விக்ரமுக்கு கம்பேக் படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... bharathiraja health : பாரதிராஜா நலம் பெற்று வருகிறார்..நேரில் சந்தித்த நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்!