விஜயின் செல்ல பிராணியை முடிவு செய்த தளபதி 67 டீம்..படப்பிடிப்பு எப்போது தெரியுமா?
‘தளபதி 67’ படத்தில் நடிக்கவுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் படத்துக்குத் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் கலவையான விமர்சங்களை பெற்ற போதிலும் நல்ல வசூல் கண்டது. தளபதியின் படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதை அடுத்து தற்போது நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் அடுத்த திட்டத்திற்காக இணைந்துள்ளார்.தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் புஷ்பா பட நாயகி ராஷ்மிகா மந்தனா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் சரத்குமார்,பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குஷ்பூ, ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக படத்திலிருந்து மூன்று போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. அதோடு சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் அவ்வப்போது கசிந்து வருகிறது. ஹைதராபாத், சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பலாத்கார மிரட்டல்களை சந்தித்தேன்..பரபரப்பை கிளப்பிய பிரபலம்
வாரிசு படம் குறித்த புதிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜயின் அடுத்த படமான தளபதி 67 குறித்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்து விட்டன. விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கம் இந்த படத்தில் சமந்தா, த்ரிஷாவின், கீர்த்தி சுரேஷ் இவர்களில் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...விஜய் சார்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன விஜய் மக்கள் இயக்கம்
இந்நிலையில் தளபதி 67 படத்தில் 'ஏ கிரேட் டேன் நாய்' ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த நாய் மலையாளத்தில் பாசில் ஜோசப் நடிப்பில் உருவாகி வரும் ‘பலத்து ஜான்வர்’ படத்தில் நடித்துள்ளது. தற்போது ‘தளபதி 67’ படத்தில் நடிக்கவுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் படத்துக்குத் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..தன் மகளை நினைத்து பூரித்து போன மகேஷ் பாபு...வைரல் வீடியோ இதோ